100நாட்கள் திட்ட பணியாளர்கள் ஆகியோர்களை பாரத பிரதமரின் விபத்து காப்பீடு !தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண் கடன்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 2020-2021 ஆண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.வர்கள் தலைமையில் அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
போதிய வருமானம் ஈட்டக்கூடிய கணினி பயிற்சி, செல்போன் பயிற்சி மற்றும் மகளிர்களுக்கான தையல் பயிற்சிகளை நடத்துமாறும், மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த முன்கள பணியாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள், 100 நாட்கள் திட்ட பணியாளர்கள் ஆகியோர்களை பாரத பிரதமரின் விபத்து காப்பீடு மற்றும் பிரத மந்திரி ஆயுள் காப்பீடு திட்டங்களில் இணைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், முத்ரா கடன் திட்ட இலக்கை அடைவதற்கு அனைத்து வங்கிகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தாட்கோ, மாவட்;ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறைகள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண் கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியார் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்;கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மா.ஊ..வ.மு) திருமதி.திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் திரு.தெய்வேந்திரன், இந்திய ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் திரு.ஸ்ரீராம், நபார்டு உதவி மேலாளர் திரு.ராஜா சுரேஷ்வரன், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி.தங்கலெட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சண்முகவேல், அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.