மாவட்டச் செய்திகள்

100வது பயனாலியாக சமூக பொறுப்பு நிதியின் கீழ்(CSR Fund) தலா ரூ.35,000/- மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள்!!

நாள்: 09.03.2022
விருதுநகர் மாவட்டம்,
உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு
ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு,100 தனிநபர் இல்ல கழிப்பறைகள் 7 மாதத்திற்குளாக கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் உதயம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் தாங்களே எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில், குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டும், சமூக பொறுப்பு நிதியின் கீழ்(CSR Fund) தலா ரூ.35,000/- மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 100-வது பயனாளியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குந்தலப்பட்டி ஊராட்சி, நாராயணபுரத்தை சேர்ந்த செல்வி.நந்தினி என்ற மாற்றுதிறனாளி நபர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கட்டப்பட்ட 100-வது தனிநபர் இல்ல கழிப்பறையை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.

நாம் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும்;; திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் பொருட்டும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் கட்டித்தரபட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மேற்கண்ட முயற்சிகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மூலமாக கிராமப் புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக உதயம் என்ற சீரிய திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய வகையில் குறிப்பாக மாற்றுத்திறனாளி பெண்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும், சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட(Special Toilets) கழிப்பறைகள் கட்டப்பட்டு, மாற்றுத் திறனாளிகள்; எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கழிப்பறைக்குள்ளே செல்ல ஏதுவாக சாய்தள வசதி, சௌகர்யமான முறையில் அமர மேற்கத்திய வடிவமைப்பிலான கழிப்பறை(Western Toilet), அருகிலேயே கம்பி வடிவிலான கைப்பிடிகள்(hand support) மற்றும் அதிக இடவசதி ஆகியவற்றை உள்ளடக்கிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்பொழுது 7 மாதத்திற்குள் முதற்கட்டமாக 100 கழிப்பறைகள் கட்டப்பட்டு பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டு இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குந்தலப்பட்டி ஊராட்சி, நாராயணபுரத்தில் செல்வி.நந்தினி என்ற மாற்றுதிறனாளி நபர் பயன்படுத்துவதற்கு கட்டப்பட்ட 100-வது தனிநபர் இல்ல கழிப்பறையை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி. திறந்து வைத்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ, மாணவியர்கள் பட்டியல்கள் பெறப்பட்டு, அவர்களுக்கும் இந்த தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிடம் தேவைப்படும் மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button