சென்னை மாவட்டச் செய்தி

20 லட்சம் மதிப்பிலான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் வாகனங்களை 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்!

20 லட்சம் மதிப்பிலான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவி ஏற்ற பின் பொதுமக்கள் நலன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் சாமானிய பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாமானிய பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்கள் முன்னிலையில் வழங்கி வருகின்றார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 46 பயனாளிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயராணி ஐஏஎஸ் முன்னிலையில் வழங்கியபோது.

அதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் முன்னிலையில்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் 35லட்சத்து 19ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டரை, 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்தத் திட்டத்தில் பயன் பெற்ற அனைத்து பயனாளிகளும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் தமிழக முதல்வர் அனைவருக்கும் மனமகிழ்ந்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button