அரசியல்

2021சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகளுடன் கைகோர்த்துக் கொண்டு கட்சி விதி மீறி செயல்பட்ட திமுக ஒன்றிய செயலாளர்களிடம் 30 லட்சம் பெற்றுக் கொண்டு மறுபடியும் ஒன்றிய செயலாளர் பதவியா!?மயிலாடுதுறை மாவட்ட திமுக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன்!!?



திமுக ஒன்றியச் செயலாளர் தேர்தல் புகார்களுடன் அறிவாலயம் படையெடுக்கும் உடன்பிறப்புகள்!
பேசினோம்.

ஒரு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அடுத்து முக்கியமானப் பதவி என்றால் அது ஒன்றியச் செயலாளர் பதவிதான். அப்பதவியில் உள்ளவர்தான் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் முடியாதக் காரியத்தைக் கூட, ஒன்றியச் செயலாளர் நேரடியாக அமைச்சரை அணுகி முடித்துக்கொடுப்பார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தப் பொறுப்புகளுக்குத்தான் தற்போது தி.மு.க-வில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில்தான் பிரச்னைகளும் நடந்துவருகின்றன.
ரொம்பப் பிரச்னைக்குரிய ஒன்றியச் செயலாளர்களைத் தவிர, மற்றவர்களை மாற்ற வேண்டாம், தொடரட்டும் மீண்டும் புகார்கள் வந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்றுதான் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பல ஆண்டுகளாக ஒரே ஒன்றியச் செயலாளரே தொடர்ந்து பொறுப்பில் இருப்பதையும், ஏகப்பட்டப் புகார்களுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பதை விரும்பாமலும் தி.மு.க நிர்வாகிகள் புகார்களை அள்ளிக்கொண்டு அறிவாலயத்தில் ஐக்கியமாகிறார்கள். முதலில், இவ்வாறானப் புகார்களை விசாரிக்க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா,  ஆ.ராசாவுடன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், என்.ஆர்.இளங்கோவும் அண்பகம் கலை இணைந்துள்ளனர்.
இந்த நிலையில்ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் அறிவாலயத்தில் குவிந்தனர்.


அதேபோல ஒருங்கிணைந்த நாகபட்டினம் மாவட்டமாக இருந்த போது கடந்த அதிமுக ஆட்சியில் 28 டிசம்பர் 2020 பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக குத்தாலம்
மயிலாடுதுறை
சீர்காழி , தரங்கம்பாடி நான்கு தாலுகாவை உள்ளடக்கி அரசு ஆணை அறிவித்தது.
அதன் பின்பு மயிலாடுதுறை திமுக மாவட்ட பொறுப்பாளராக நிவேதா முருகன் அவர்களை கட்சி தலைமை அறிவித்த பின்பு தற்போது வரை திமுக கட்சியில் உட்கட்சி பூசல் நீண்டுகொண்டே இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
தற்போது தமிழக முழுவதும் திமுக கட்சி தலைமை கழகம் மாவட்ட ஒன்றிய செயலாளர் அவர்களுக்கான கட்சித் தேர்தல் நடத்தியது அதில் பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மீது இருந்த அதிருத்தியால் மும்முனைப் போட்டி நன்குமுனைப் போட்டி என்று  கடும் போட்டி நிலவியது. இதில் முக்கியமாக மதுரை மாவட்ட மற்றும் தேனி மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர் தேர்ந்தெடுப்பதில் மாவட்டச் செயலாளர் நேர்மையான முறையில் நடத்தவில்லை என்றும் குறைந்தது ஒரு ஒன்றிய செயலாளர் பதவிக்கு 30 லட்சம் ரூபாய் வரை மாவட்டச் செயலாளர் பெற்றுக் கொண்டு ஒன்றிய செயலாளராக நியமிக்க உள்ளதாகவும் புகாரின் பேரில் திமுக கழகம் ஒன்றிய செயலாளர் பதவிகளை அறிவிக்காமல் விசாரணை நடத்துவதாக தகவல் வந்துள்ளது.

மயிலாடுதுறை திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மேற்கு ரவிக்குமார் கிழக்கு மலர்விழி

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் முக்கியமாக கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.
இதில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர்  மலர்விழி இவர்கள் இரண்டு பேரும் மீதும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக புகார் வந்த நிலையில் எப்படியாவது கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்று குறுக்கு வழியில் இறங்கி உள்ளதாகவும் அதற்காக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலா 30 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஒன்றிய செயலாளர் பெயர் பட்டியலை தலைமைக் கழகத்திற்கு அனுப்புவதற்கு சம்மதம் தெரிவிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள சூர்யா வெற்றி கொண்டான் அவரிடம் ஒப்புதல் வாங்கி இருப்பதாகவும் மற்ற திமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைமைக் கழகத்திற்கு பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகார்களின் உண்மை தன்மையை திமுக தலைமை களத்தில் ஐவர் குழு விசாரணை நடத்தி வருகிறது என்ற தகவல் வந்துள்ளது.

2021 நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில்
சீர்காழி சட்டமன்ற திமுக வேட்பாளர் பன்னீர் எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அதிமுக நிர்வாகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு திமுக வேட்பாளரை தோற்கடிக்கும் நோக்கத்தில்  செயல்பட்டதாகவும் திமுக சட்டமன்ற வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை செய்யவில்லை என்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வக்கீல் எம்.பன்னீர்செல்வம் 12 ஆயிரத்து 148 குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றார்.இதற்கு காரணம்
இவர்கள் இரண்டு பேர் தான் என்று திமுக கட்சியில் பல புகார்கள் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 510. ( 2,52,510 )  பேர் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 388 வாக்குகள் மட்டுமே பதிவானது. (சுமார் 70000 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை)என்பது குறிப்பிடத்தக்கது.
(எம் பன்னீர்செல்வம் திமுக 94 ,057,
பிவி பாரதி அதிமுக 81,909) குறிப்பிடத்தக்கது

மயிலாடுதுறை அ திமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஒன்றிய செயலாளர் நற்குணன் பாரதி முன்னாள் எம்எல்ஏ அதிமுக

அதே போல்
இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த பவுன்ராஜை, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் செம்பனார்கோயில் ஒன்றியப் பெரும் தலைவருமான நிவேதா.எம். முருகன்  3,000 வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக திமுக தலைமைக் கழகத்திலும் புகார் அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் திமுக தலைமை கழக தேர்தல் குழு விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
திமுக தலைமைக் கழக தேர்தல் குழு புகார் கொடுத்தவரிடம் விசாரணை நடத்தியது மட்டுமில்லாமல் திமுக ஐபக் மற்றும் உளவுத்துறை தகவல்களையும் கேட்டு அதன்படி தான் முடிவு எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் பத்தாம் தேதி மீண்டும் நிர்வாகிகளின் புகார்கள் மீது விசாரணை நடக்கும் என்றும் தகவல் வெளியாகி வந்துள்ளது மாவட்டச் செயலாளர்கள் யாரும் ஒன்றிய செயலாளர் பதவிகளை அறிவிக்க கூடாது என்றும் முரசொலி நாளிதழில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது எந்த தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ  மயலாடுதுறை மாவட்ட திமுக கட்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மையாக தெரிகிறது.



 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button