2021 திமுக தேர்தல் வாக்குறுதி (181) 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு நிறைவேற்ற கோரிக்கை!
2021 திமுகவின் தேர்தல் வாக்குறுதி (181)
12 ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் ஏன் ?
உங்கள் தொகுதி ஸ்டாலின்’ கலந்துரையாடலின் போது பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181 இல் இதை அறிவித்தார்.
2021 இல் திமுக மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆனால் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.
ஆனால், “கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்றுவேன் என பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்று முதல்வரே கூறி வருகிறார். ஆனால் எங்கள் கோரிக் கையை இதுவரை நிறைவேற்றவில்லை!
அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில்
பகுதிநேர ஆசிரியர்களாக
கணினி உடற்கல்வி ஓவியம் தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல் திறன்
ஆகிய பாடங்களில்
13 கல்வியாண்டாக பணிபுரியும்
12 ஆயிரம் பேரை
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சட்டசபையில்
பல கட்சிகள்
இவர்களுக்காக கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிய போகிறது.
ஆனால் முதல்வர் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.
இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் கடைசியாக இவர்களுக்கு
10 ஆயிரம் சம்பளம்
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து முதன்முதலில்
2500 சம்பள உயர்வு
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க
ஆணை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு வழங்கினால் இனி 12500 சம்பளம் கிடைக்கும்.
ஆனாலும் சம்பள உயர்வு பணம் இன்னும் வழங்கவில்லை.
மேலும் தாமதம் செய்யாமல் புதிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்
10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என
பள்ளிக்கல்வி அமைச்சர்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ந்தேதி அறிவிப்புக்கு இன்னும்
ஆணை வரவில்லை.
மருத்துவ காப்பீடும் உடனே வழங்கி செயல்படுத்த வேண்டும்.
முதல்வரும் பணி நிரந்தரம் செய்யவில்லை,
பள்ளிக்கல்வி அமைச்சர் வாக்குறுதியும் இன்னும் முழுவதும் செயல்படுத்தவில்லை.
இப்படி ஒவ்வொன்றும் தாமதம் ஆகுவதால் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
பணிநிரந்தரம் செய்வோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்த முதல்வர் இதுவரை எங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளான
அனைத்து நாட்களும் முழுநேர வேலை
மே மாதம் சம்பளம்
பொங்கல் போனஸ்
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி
பணிப் பாதுகாப்பு
போன்றவற்றை
மனிதாபிமானம் கொண்டு கூட வழங்கவில்லை என்பது
ஏமாற்றமாகவும், வேதனையாகவும் உள்ளது.
தற்போது இந்த 12500 புதிய சம்பளம் ஆண்டின் பதினோரு மாதங்களுக்கு வழங்க
167 கோடி ஆகிறது.
காலமுறை சம்பளம் வழங்க தமிழக அரசு மேலும்
250 கோடி நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும்.
இதனை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்,
12105 பகுதிநேர ஆசிரியர்கள் குடும்ப நலன் மேம்படவும்
தமிழகஅரசு மனிதாபிமானம் கருதி
இந்த பட்ஜெட்டில் இதற்கு தேவையான நிதி ஒதுக்கி செயல் படுத்தவேண்டும்.
திமுக வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற
முதல்வர்
சிறப்பு மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
Cell: 9487257203