2021 மாதம் வரை காலியாகவுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு, 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 46 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்கள் என மொத்தம் 54 பதவியிடங்களுக்கு சாதாரணத் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்காக 188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021-க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று(03.09.2021) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற
து.
இக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021-க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டு தெரிவித்ததாவது:
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜீன் 2021 மாதம் வரை காலியாகவுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு, 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 46 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்கள் என மொத்தம் 54 பதவியிடங்களுக்கு சாதாரணத் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்காக 188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
19.03.2021 வரையிலான சட்டமன்ற வாக்காளர் பட்டியலினை அடிப்படையாக கொண்டு காலியாகவுள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலரால்(வ.ஊ) தயார் செய்யப்பட்டு 31.08.2021 அன்று சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
தங்களது பெயர்களை ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான வாக்காளர் பட்யலில் இடம் பெற செய்ய வேண்டும் எனில் தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரை அணுகி சட்டமன்ற வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கோரி விண்ணப்பம் அளித்து பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரால் வேட்புமனு பெறப்படும் கடைசி நாள் வரை மேற்கொள்ளப்படும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு துணைப்பட்டியல் வெளியிடப்படும்.
தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக பதவியிடங்களுக்கு மட்டும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதால் வேறு ஒரு வார்டில் குடியிருக்கும் ஒரு நபர் தகுதியின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட முன் வந்தால் அந்த நபரின் பெயர் சம்மந்தப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் சுற்றறிக்கை எண்.ஊ19/2021-ல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி அவர் குடியிருக்கும் உள்ளாட்சி வார்டில் கடைசியாக வெளியிடப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் அவரின் பெயரை மட்டும் சேர்த்து திருத்தப்பட்டியலாக வெளியிடப்படும்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடைபெறும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமுல்படுத்தப்படும் என்பதால் தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) அ.சந்திரசேகரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.