2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில்100 இடங்களில் சுவர் விளம்பரம் மூலம் பிரச்சார பணிகளைத் தொடங்கிய பிஜேபி கட்சி மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் மூலம் பிரச்சார பணிகளைத் தொடங்கிய பிஜேபி கட்சி மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம்!!
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 9 வது முறை பொன் ராதாகிருஷ்ணன் !?
பிஜேபி கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கட்சிப் பணிகளை துரிதப்படுத்த நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட பிஜேபி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ப ஜ க கட்சியை வலுப்படுத்தும் வைகையில்
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சி மாபெரும் வெற்றியை அடையவும்
பா.ஜ.க ஊடகபிரிவு மாநில செயலாளர் திருக்கடல் உதயம் களத்தில் இறங்கி முழுவீச்சில் கட்சி பணியாற்றி வருவதை தமிழக பிஜேபி கட்சி முன்னணி தலைவர்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் குடும்ப நண்பரும் நம்பிக்கை குரியவரான திருக்கடல் உதயம் அவர்கள் கடந்த சில மாதங்களாக சுவர் விளம்பரங்களின் பணிகளை ஆரம்பித்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில்
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிஜேபி கட்சி வலுப்படுத்தும் அளவிற்கு சுவர் விளம்பரங்களை எழுதி நாடாளுமன்றத் தேர்தலுக்காக சூறாவளி போல் மாவட்டத்தை சுற்றி சுற்றி வருவதாக அப்பகுதி பிஜேபி கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் .
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரும் போட்டியிட்டனர். இதில் எச்.வசந்தகுமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிவாய்ப்பை இழந்தார் .
ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளுடன் பிஜேபி கட்சி வெற்றி பெற கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் இரவு பகலாக உழைக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் கடந்த சில மாதங்கள் முன்பிருந்தே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை சுவர் விளம்பரங்கள் மூலம் தொடங்கி விட்டோம் என்றும் ஊடகப்பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம் தெரிவித்துள்ளார்