அரசியல்

21 வன்னிய தியாகிகளை துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது எம்ஜிஆர்!!

1987 ல் வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த     ADMK அரசு 21 வன்னிய தியாகிகளை துப்பாக்கி சூடு நடத்தி கொன்றது. அதுமட்டுமல்லாமல் அன்றைய எம்ஜிஆர் அரசு வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சை படுத்தியது.. 
பிறகு 1989 ஆம் ஆண்டு தமிழினக் காவலர் ‌மு.கருணாநிதி அவர்களின் ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை சமூக நீதிப் போராட்டம் என்று உணர்ந்து வன்னியர் சமூகம் மற்றும் சில சமூகங்களை இணைத்து 20 சதவீத ஒதுக்கீடு வழங்கினார் தமிழின காவலர் மு.கருணாநிதி அவர்கள்.அவர் ஆட்சி செய்த அந்த காலக்கட்டத்தில் மக்கள் எந்த போராட்டம் செய்யாதபோது  ஆட்சிக்கு வந்த பிறகு அவர் தானாகவே வன்னியர் மக்கள் நலனைக் கருதி இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் தமிழினக் காவலர் மு.கருணாநிதி அவர்கள் உயிர் நீத்த தியாகிகள்களின்  21 குடும்பத்திற்கு தலா 3 லட்சம் பண உதவி மற்றும் அந்த குடும்பங்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கினார்.
இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு பெற அன்றைய திமுக அரசில் இருந்த வன்னியர் தலைவர்கள் மிக பெரும்  பங்காற்றினார்கள். இவ்வாறு தமிழினக் காவலர் மு.கருணாநிதி அவர்கள் வன்னியர்களின் போராட்டம் சமூக நீதிப் போராட்டம் என்று அறிந்து வன்னியர்களின் உணர்வுகளை புரிந்து மனதார இந்த அனைத்து விஷயங்களையும் செய்தார். இதேபோன்று இப்பொழுது ஆட்சியில் அமர்ந்துள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.வன்னியர்  சமூக மக்கள் பின்தங்கி  இருப்பதை உணர்ந்து வன்னியர் மக்களின் நலனை உயர்த்த அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார். 
தற்பொழுது தமிழினக் காவலர் மு. கருணாநிதி அவர்களின் வழியில்  மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற உடன் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அமல்படுத்த GO(MS)NO.75/2021 என்று அரசாணை வெளியிட்டார் அதுமட்டுமல்லாமல் தற்போது  தமிழினக் காவலர் மு.கருணாநிதி அவர்கள் வழியில் வன்னியர் போராட்டத்தை சமூகநீதி போராட்டம் என்பது அங்கீகரித்து இருபத்தொரு  உயிர்நீத்த தியாகிகளுக்கு  விழுப்புரத்தில் நான்கு கோடி செலவில் மணிமண்டபம் கட்ட ஆணையிட்டுள்ளார். மேலும் உயிர் நீத்த 21 தியாகிகளின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் 7/10/2019 அன்று திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் அதை இன்று சொன்னதை செய்தும் காட்டியுள்ளார்.

இவ்வாறு கழக அரசு எப்பொழுது அமைந்தாலும் வன்னியர் மக்களின் நலனை கருதி அனைத்து செயல்களும் செய்யப்படுகிறது.. இதுபோன்று வன்னியர் நலனை உயர்த்த பாடுபட்ட தமிழினக் காவலர் மு.கருணாநிதி அவர்களுக்கும் அந்த வழியை பின்பற்றி தற்போது செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்  3 கோடி வன்னியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

இட ஒதுக்கீடுகள் போராட்டத்தில் கலந்து கொண்ட போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சமூக நலனுக்காக போராடிய 21 போராளிகள் நினைவாக மணி மண்டபம் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் இந்த அறிவிப்பை சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த அனைத்து வன்னிய தலைவர்களுக்கும் மற்றும் மாவீரன் காடுவெட்டியார் அவர்களுக்கும் நன்றி..
குரு.விருதாம்பிகை
காடுவெட்டி குருவின் மகள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button