காவல் செய்திகள்

21.80 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் பிரபல தயாரிப்பாளர் கைது!

மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த 2010 முதல் நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனத்தை வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய மூவரும் இயக்கி வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் (Garlando properties pvt ltd, Transco properties pvt Ltd, tridas properties pvt Ltd, glowmax properties pvt Ltd) 17க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை பலர் நிர்வகித்து வந்துள்ளனர்.நெல்லை மற்றும் கோவில்பட்டி கிளை இயக்குனர்களான சைமன் ராஜா, கபில் ஆகியோரிடம் 73 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருந்த கோவில்பட்டியை சேர்ந்த ஜெயசங்கரீஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நிறுவன இயக்குனர்களான வீரசக்தி, பாலசுப்பிரமணியம், கமலக்கண்ணன் மற்றும் கிளை இயக்குனர்களான சைமன் ராஜா, கபில் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நில மோசடி வழக்கில் திரைபட தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்-ஐ  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இந்நிறுவனத்தில் ரூ.21.80 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் வாங்கப்படும் நிலத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த தொகைக்கு மாதம்தோறும் பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button