30 நாட்களுக்குள் ரூ.300 கோடியா..?சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவரும் உரையாடல் !

30 நாட்களுக்குள் ரூ.300 கோடியா..?
அமைச்சர் துரைமுருகன் உதவியாளராக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கான ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான துரைமுருகன் வீட்டில் கையெழுத்தாகியிருப்பதாகவும், மணல் கூட்டணியிடமிருந்து 300 கோடி ரூபாய் துரைமுருகன் தரப்புக்கு கைமாறியிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலாவுகின்றன. அதில், சேகர்ரெட்டி தலைமையிலான மணல் கூட்டணியின் பெயர்களே கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமைச்சர் துரைமுருகன் உதவியாளராக சந்தேகிக்கப்படும் ஒருவருடன் மணல் கூட்டணியின் இடைத்தரகர் ஒருவர் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.அதில், புரோக்கர்?: ‘போய்விட்டார்களா… இருக்காங்களா?’ உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘முடிந்தது’
புரோக்கர்: ‘தமிழ்நாடு முழுக்கவா… நாலு மாவட்டம் மட்டுமா? ‘படிக்காசு’ (மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் பெயர்) என்னாச்சு?’
உதவியாளர்:தமிழ்நாடு முழுக்கத்தான். அவருக்கும் பிரிச்சி தருவாங்க.
புரோக்கர்: ‘மொத்தம் மூணு பேரா?’
உதவியாளர்:‘இல்லை. நாலு பேர்’
புரோக்கர்: ‘யார் யாரு?’
உதவியாளர்: ‘ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், அப்புறம் வேலூர்காரர் சேகர்ரெட்டி. இதுக்கெல்லாம் சேகர்ரெட்டிதான் ஹெட்டு.’
புரோக்கர்: ‘சேகர்ரெட்டி வந்தாரா?’
உதவியாளர்: ‘அவர் வர்லை. முன்ன ஒரே முறை மட்டும் வந்துட்டுப் போனாரு. அவங்களே பிரிச்சி கொடுப்பாங்க.’
புரோக்கர்: ‘எது இருந்தாலும், ஐயா (துரைமுருகன்) கிட்ட கேட்டுச் சொல்லுங்க.
உதவியாளர்: ‘வாங்கிக்கிலாம்… வாங்கிக்கலாம்’என்பதுடன் அந்த உரையாடல் பதிவு முடிகிறது.
இந்த ஆடியோவை வெளியிட்டதாக குடியாத்தத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 நாட்களில் முத்திரை பதித்த மு.க.ஸ்டாலின் ஆட்சி என செய்தி தாள்களிலும், இணையங்களிலும் விளம்பரங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது. இந்நிலையில் 30 நாளில்ரூ.300 கோடி பேரம் பேசிய திமுக மூத்த அமைச்சர் என்கிற ஆடியோ கசிந்ததால் கடும் அதிருப்தியில் திமுக தொண்டர்கள் இருப்பதாக தகவல்!