மாநகராட்சி

300வாகனங்களுக்கு 300 கோடி ரூபாய் டீசல் போட்டு ஊழல் செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் !! கோவை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை எடுக்கும் வகானகளுக்கு மட்டும் !

கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை எடுக்கும் வகானகளுக்கு மட்டும் ஆண்டுக்கு டீசல் செலவு ரூ.40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பொது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல்!

தற்போது கோவை மாநகராட்சியில் நிதியில்லாமல் 150 கோடி ரூபாய் வளர்ச்சி  திட்டப் பணிகள்  நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில் கோவை மாநகராட்சியில், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவாக மட்டும் ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளதாக் கணக்கு காட்டப்பட்டது  அம்பலமாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில்கோவை மாநகராட்சியில், 2013-2014 நிதியாண்டின்போது, 300 கோடி ரூபாய் வரை டெபாசிட் இருந்ததை கடந்த ஆறாண்டுகளில் கஜானாவை காலி செய்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.  இப்போது சம்பளம் கொடுக்கவே நிதியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையால் ரூ.150 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் லஞ்சம் தான்.அரசியல்வாதிகள் திட்டமிட்டு  வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் ஊழல் செய்வது மட்டுமில்லாமல், திடக்கழிவு மேலாண்மை, கொள்முதல், பராமரிப்பு, செலவு கணக்குகளில் மாநகராட்சியின் பொறியாளர்கள் பலரும் அடித்துள்ள பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது .

  கோவை மாநகராட்சியிலுள்ள வாகனங்களுக்கு செலவாகும் மாதாந்திர எரிபொருள் செலவு, வருடாந்திர பராமரிப்புச் செலவு போன்ற பல்வேறு விபரங்கள், பொது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்துள்ளது.

, அதில் தெரிவித்துள்ளது கோவை மத்திய மண்டலத்தில் 71, கிழக்கு மற்றும் மேற்கில் தலா 51, வடக்கில் 49, தெற்கில் 37 என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக, மாநகராட்சியின் வாகனங்களைத் தவிர்த்து, ஒப்பந்த முறையில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் தனியாக நிதி செலவிடப்படுகிறது. இவற்றைத் தவிர்த்து, மேயர், கமிஷனர், வி.ஐ.பி.,பயன்பாட்டுக்கென மூன்று இன்னோவா கார்கள் உட்பட 32 வாகனங்கள், அதிகாரிகளின் ஆய்வுக்காகத் தரப்பட்டுள்ளன. எரிபொருளுக்கு ரூ.25 கோடி!மொத்தத்தில் மாநகராட்சி பயன்படுத்தும், 300க்கும் குறைவான வாகனங்களுக்கு, ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வரை, எரிபொருள் செலவாவதாகக் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி- செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், இந்த வாகனங்களுக்கு 16 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 992 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வண்டிக்கு மாதம் 73 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் செலவாகிறது.பராமரிப்பு பெயரில் ‘கொள்ளை’அந்தளவுக்கு மாநகரில் குப்பை அள்ளப்படுவதுமில்லை. ஒரு வண்டிக்கு 200 லிட்டர் டீசல் போடுவதாக பில் வாங்கி 120 லிட்டர் மட்டுமே போடப்படுகிறது. மீதமுள்ள தொகை, இன்ஜினியர், வண்டி டிரைவர், பங்க் நிர்வாகி ஆகியோரால் பகிரப்படுகிறது. பராமரிப்பு என்ற பெயரில் பொறியாளர்கள் அடிக்கின்ற தொகைதான் அதிகமாகவுள்ளது. 2014லிருந்து 2018 வரை மட்டும், மாநகராட்சி வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவாக 53 கோடியே 96 லட்சத்து 59 ஆயிரத்து 299 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
ஆக, வாகனங்களின் எரிபொருள், பராமரிப்புச் செலவாக மட்டும் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.ஐநுாறு ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளருக்கு, ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றுத்தரும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு, மாநகராட்சி அதிகாரிகளின் ஊழலும் சொத்துக்குவிப்பும் கண்ணில் தெரியாததுதான் ஆச்சரிய முரண்பாடு! ஒரு வண்டிக்கு 200 லிட்டர் டீசல் போடுவதாக பில் வாங்கி 120 லிட்டர் மட்டுமே போடப்படுகிறது. 80 லிட்டர் டீசலுக்கான தொகையை மாநகராட்சி பொறியாளர் மற்றும்  வாகன ஓட்டுநர், நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மேலாளர் பிரித்து கொடுப்பதாக அதிர்ச்சித் தகவல்!

எது எப்படியோ தற்போது உள்ள தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தை சீரமைக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் உள்ள குப்பை கழிவுகளை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு டீசல் போடுவதற்கு ஆறு ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சொல்லி இருக்கும் இந்த ஊழல் கணக்கை தணிக்கை செய்து விசாரணை நடத்த நேர்மையான அதிகாரிகளை தெய்வத்தால் மட்டுமே கோவை மாநகராட்சியில்  லஞ்ச ஊழல் செய்யும் பெருச்சாளிகளை கண்டுபிடிக்க முடியும் அப்படி கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button