மாவட்டச் செய்திகள்

மழைகாலத்தில் டெங்கு நோய் தொற்றுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் வகையில் நடவடிக்கை!


விருதுநகர் மாவட்டம்மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,தலைமையில் நடைபெற்றது.

.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படஉள்ளது.

  1. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நெருக்கமான மர காடுகள் “மியாவாகி” (MIYA WAKI forest Method) முறையில் ஒரு ஊராட்சிக்கு 1 MIYA WAKI மரங்கன்றுகள் நடுவதற்கான இடங்கள்தேர்வு செய்தல்.
  2. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெருமளவு “மரகன்றுகள் நடுதல்” (MASSIVE TREE PLANTATION) நடுதலுக்காக ஒன்றியங்களில் ஊராட்சி மற்றும் இடங்கள் தேர்வு செய்தல்.
  3. மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிலங்களை மேம்படுத்தி தீவனப்பயிர்களை பயிரிட்டு மேய்ச்சல் நிலங்களாக மாற்றும் பொருட்டு தேர்வு செய்யபட்டுள்ள இடங்களை உதவி செயற்பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு MGNREGS திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீடுகள் சமர்ப்பித்தல்;.
  4. அனைத்து வட்டாரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நர்சரிகளில் மூலிகை (HERBAL) மற்றும் ஊட்டச்சத்து (Nutrition Garde) பயிர்களை உருவாக்குவதற்குக்கான திட்ட செயலாக்கம் ” Plan of Action” தயாரித்தல்.
  5. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு 1. Pradhan Mantri Suraksha Bima Yojana – விபத்து காப்பீட்டு மற்றும் – Pradhan Mantri Jeevan Jothi Bima Yojana ஆயுள் காப்பீடு திட்டங்களில் பணியாளர்களை சேர்த்தல் தொடர்பான அறிக்கை.
  6. புதிதாக பண்ணைக்குட்டைகள் MGNREGS திட்டத்தின்கீழ் அமைக்க விருப்பமுள்ள பயனாளிகள் விபரம்
  7. அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான ஆய்வறிக்கைகள்
  8. அனைத்து கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்;சிகளில் சில இடங்களில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்து பொது சுகாதரத்தினை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே ஒவ்வொரு கிராம ஊராட்சிகள் வாரியாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வார்டுகளிலும், வாரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் “வெகுஜன சுத்தம்”; Mass Cleaning செய்தலுக்கான தேதிகள் நிர்ணயம் செய்தல் மற்றும் எதிர்வரும் மழைகாலத்தில் டெங்கு நோய் தொற்றுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் வகையில் இப்பணிகளை மேற்கொள்ளும்; விதமாக சுகாதார பணியாளார்கள், தூய்மைகாவலர்கள் மற்றும் டெங்குமஸ் தூர்களை DBC Workers (Domestic Breeding Checkers) கொண்டு Mass Cleaning செய்தலுக்காக திட்ட செயலாகம் ” Plan of Action” தயாரித்தல்.
  9. தனிநபர் வீடுகளில் மாற்று திறனாளிகளுக்கான “ACCESSIBLE TOILET “ கழிப்பறைகள் சாய்தளத்துடன் உருவாக்கும் வகையில் 5 மாடல்கள் தயார் செய்து முதற்கட்டமாக 100 பயனாளிகளை தேர்வு செய்து பயன் பெற செய்தல்.
  10. ஏற்கனவே பயன்பெற்ற பண்ணைக்குட்டை பயனாளிகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க விருப்பமுள்ள பயனாளிகள் விபரம்.
  11. ஊராட்சிகளிலுள்ள ஊரணிகள், சிறுபாசனக்கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்களில் inlet/outlet பகுதிகளில் நீர் உறிஞ்சும் அகழிகள் அமைத்தல் தொடர்பான பிரேரணை அளித்தல்
    ஆகிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.
    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) .பிருத்திவிராஜ். மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button