பித்தளை
முலாம்
பூசப்பட்ட போலியான விளக்குகளை பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்று நூதன மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள்! நடவடிக்கை எடுக்காத கோவில் பழனி உதவி மற்றும் இணை ஆணையர்கள்! நடவடிக்கை எடுப்பாரா இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்!?

இரண்டு மாதத்திற்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை வாடகைக்கு கடையெடுத்து பித்தளை
முலாம்
பூசப்பட்ட போலியான விளக்குகளை விற்கும் மோசடி நபர்களுக்கு பழனி
நகராட்சி நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் நிர்வாகம் உடந்தையாக
அகிலபாரத இந்து மகாசபா குற்றச்சாட்டு!பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா !?

பழனி மலைக்கோவிலுக்கு தீபாவளி முடிந்தவுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு கார்த்திகை மார்கழி தை மாதங்களில் முருகனை தரிசிக்க பல மாநிலம் பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர் .மூன்று மாதம் சீசன் என்பதால் ஆந்திரா கர்நாடகா சேர்ந்த நபர்கள் வருடம் வருடம் நகராட்சி இடங்கள் மற்றும் பழனி அடிவாரம் கிரி வீதி பகுதியில் இரண்டு மாதத்திற்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடைகளை உள் வாடகைக்கு பிடித்து வியாபாரம் செய்துவந்தனர் நகராட்சி நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒழுங்குமுறை படுத்திவந்தனர் வியாபாரிகள் பயந்துகொண்டு பிளாட்பார கடைகளை விட்டுவிட்டு காம்ப்ளக்ஸ் கடைகளையும் தேவஸ்தான கடைகளிலும் படையெடுத்து ஓடி வந்தன .பின்பு கார்த்திகை மார்கழி இரண்டு மாதத்திற்கு பாலாஜி பவன் முடி கொட்டகை அருகே இருக்கும் தேவஸ்தான கடைகளை இரண்டு மாதத்திற்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை குத்துவிளக்கு கடைகளை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக கடை அமைத்து படுச்சோராக வியாபாரம் செய்து பக்தர்களிடம் நூதன மோசடி செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர் . இந்த நூதன மோசடி எப்படி செய்கிறார்கள் என்பதை அகில பாரத இந்து மகாசபா நிர்வாகிகள் கூறிய போது திரைபடத்தில் வரும் மோசடி காட்சிகளை மிஞ்சும் வகையில் இருந்தது. சில விளக்குகள் மட்டும் ஒரிஜினல் பித்தளை விளக்குக்கள் வைத்து மற்ற விளக்குகள் ஒருவகை மண்ணினாலும் மாவினாலும்
பித்தளை முலாம் பூசப்பட்ட போலியான விளக்குகளையும் கலந்து வைத்து பழனி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை சூசகமாக ஏமாற்றி நூதன முறையில் விற்று மோசடி செய்து விடுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு பல ஆயிரங்கள் விற்பனை செய்யும் பித்தளை விளக்குகள் பரிசுப் பொருள் எனக்கூறி விற்பனை செய்யும் கடையில் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை .சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் பெயரிட்டு புகைப்படம் அமைத்து விளம்பர பதாகை வைப்பதும் இல்லை, சில கடைகளில் எடை போடுவதில்லை.பொருட்களில் தரம் இல்லை இதனால் நியாயமாக விற்பனை செய்யும் உள்ளூர் கடைக்காரர்களுக்கும் பழனி மக்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகின்றன. பழனி என்றாலே ஏமாற்றும் ஊர் என பேசும் அளவிற்கு களங்கம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் புலம்பல் தற்போது இருக்கின்ற சூழ்நிலையில்
உள்ளூர் மக்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியாக இருக்கும் சூழலில் சில கடைகாரர்கள் பல லட்சம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்க்கு பாக்கி தொகை நிலுவையில் வைத்துள்ளனர் என பேசப் பட்டு வருகிறது. அனைவருக்கும் தெரியும் ஆனால் ஏன் நம் மண்ணின் மைந்தர்கள் உள்ளூர் மக்களுக்கு கடைகளை விடக்கூடாது எனவும் வெளியூர் மக்கள்தான் உங்களுக்கு முக்கியமா எனவும் கோவில் நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.வாழ்வாதாரத் திற்கு போராடும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி நகராட்சி மற்றும் தேவஸ்தானம் இடங்களை பல லட்சத்திற்கு உள் வாடகைக்கு பிடித்து வியாபாரம் செய்ய வரும் நபர்களை கண்டறிந்தும் வெளியூர் நபர்களுக்கு உள் வாடகைக்கு (விளக்கு) (சொட்டர்) கடைகளுக்கு விடப்படும் கடை உரிமையாளர் மீதும் அதற்கு உடந்தையாக செயல்படும் கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் மீதும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!? மற்றும் மோசடியாக பித்தளை முலாம் பூசப்பட்ட போலி விளக்குகளை விற்பனை செய்து வரும் மோசடி நபர்களை கண்டு பிடித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் சார் ஆட்சியர் அவர்கள். மாவட்ட கண்காணிப்பாளர்கள், ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்
அகில பாரத இந்து மகாசபா சார்பாக போராட்டத்தை முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க வைப்போம் உள்ளூர் மக்களை வாழ விடு! உள்ளூர் மக்களை பிழைக்க விடு
சிவ பால மூர்த்தி
மாநில அமைப்பாளர் அகில பாரத இந்து மகாசபா எனக் கூறியுள்ளார்!