50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை
அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டார். !
50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை
அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டார். !
மயிலாடுதுறை மாவட்டம்; மயிலாடுதுறையில் உள்ள சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அதே பள்ளியில் மாணவர்களுக்கான விடுதியில் வார்டனாகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் படித்து வருகிறார். அந்த மாணவரை ஆசிரியர் சீனிவாசன் மிரட்டி பாலியல் வன்கொடுமை சேர்ந்ததாக கூறப்படுகிறது.
மாணவனின் தாய் இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சீனிவாசன் மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சோதனைக்கு பின் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவரை காவல் துறையினர் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் 50,000 பணம் கொடுக்காவிட்டால் பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்வேன் என அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதா மிரட்டியதாகவும் தெரிகிறது.
இது சம்பந்தமாக தஞ்சாவூர் சரக டி ஐ ஜி கயல்விழி அவர்களிடம் பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை டிஐஜி கயல்விழி அவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுதல், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்தும் முன்ஜாமீன் கிடைக்கும்வரை கைது செய்யாமல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு துணை போவதைக் கைவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். குறிப்பிட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர் என்றும், இனிமேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடக்க மாட்டார்கள் என்றும்
மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை அனுகினர், மாதர் சங்கத்தினர் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறை துணைக்காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா, அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மத்தியக்குழு உறுப்பினர் அமிர்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுதல், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்தும் முன்ஜாமீன் கிடைக்கும்வரை கைது செய்யாமல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு துணை போவதைக் கைவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர். குறிப்பிட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர் என்றும், இனிமேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடக்க மாட்டார்கள் என்றும் உறுதி அளித்தனர். அதை ஏற்றுகொண்ட மாதர்சங்கத்தினர் நடத்துவதாக அறிவித்த போராட்டத்தைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.