85 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம்

விருதுநகர் மாவட்டம்
கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.85 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாண்புமிகுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமிண்ட்ஸ் தொழிற்சாலையில் இன்று(17.07.2021) கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து சிறப்பாக செயல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆக்ஸிசன் உற்பத்தி மையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிசன் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை வளாகத்தில் கூடுதலாக ரூ.85 லட்சம் மதிப்பில் இந்த விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை வளாகத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலையின் மூலம் நாளொன்றுக்கு 13,68,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 195 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரை ஆக்சிஜன் நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியம், ராம்கோ சிமெண்ட்ஸ் மூத்த உபதலைவர் (உற்பத்தி) எஸ்.ராமலிங்கம், பொது மேலாளர்(கணக்கு மற்றும் நிர்வாகம்) மணிகண்டன், பொது மேலாளர் (இன்ஜினியரிங்) கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ராம்கோ நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.