Uncategorizedகாவல் செய்திகள்

92 வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!
லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்
கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா காவல் கண்காணிப்பாளர்!?

வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!
லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்
கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்!
மாவட்ட ஆட்சியர்& காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?


நரி குளத்தைச் சேர்ந்த ஜெயநாயகம் மகள் ஜெயந்தி ராணிக்கு 17/03/2023 அன்று கன்னியாகுமரி லீலாபுரம் கிராமத்திற்கு 327/27 327/29 சர்வே என் கொண்ட பாஸ்கரன் விற்று கிரையம் செய்துள்ளதாகவும் அந்த வீட்டில் வசிக்கும் 92 வயது மூதாட்டி சாராலை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு வீட்டு கதவை பூட்டி சாவியை
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு
புகார் கொடுத்துள்ளதாகவும் 92 வயது மூதாட்டி வசிக்கும் வீட்டிற்கு சென்ற காவலர்கள் வீட்டை பூட்டி சாவி கேட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்!


தாயின் பெயரில் இருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை நான்கு மகன்கள் தங்கள் பெயரில் மாற்றி விட்டு பெற்ற தாயை ஈவு இரக்கமின்றி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளதாக 92 வயதான மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க காத்திருந்த அவல நிலை!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் 92 வயது மூதாட்டி கொடுத்த மனு


சொத்தை பெயர் மாற்றம் செய்ய சதிதிட்டம் போட்டு கொடுத்த ஸ்டேட் வங்கியில் பணியில் இருக்கும் மூத்த மகன் பாஸ்கரன் மீது காவல்துறையினர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் தன்னை வீட்டை விட்டு விரட்டி அனுப்பிய நான்கு மகன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் நான் உயிரிடம் இருக்கும் வரை என்னுடைய வீட்டை
மீட்டு என்னிடம் தரக்கோரி குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்த 92 வயது கண்ணீர் மல்க கூறியது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைவரின் கண்களிலும் கண்ணீர் வருவதை பார்க்க முடிந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நரி குளம் மகாதானபுரம்
லீபுறம் கிராமத்தில் வசித்து வருபவர் 92 வயதான மூதாட்டி
சாராள் .
இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள்
மூத்த மகன் பாஸ்கரன் இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்டேட் வங்கில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரின் தூண்டுதலின் பெயரில் தம்பிகளான அருள்தாஸ், பிரேம்சிங், முத்துக்குமார், கூட்டாக சேர்ந்து ஆசை வார்த்தைகளை கூறி வயதான தன் தாயிடம் இருந்த சொத்துக்களை அபகரித்து உள்ளனர். 92 வயதான சாரால் மூதாட்டி வீட்டை விட்டு விரட்டி விட்டதால் நடுத்தெருவில்
தற்போது இருப்பதால் தன்னுடைய மகள் தாயை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டில் வைத்துள்ளார் .இந்நிலையில்
தான் குடியிருந்த வீட்டில் கதவை பூட்டி சாவியை
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சொன்னதின் பேரில் மூதாட்டி சாராள் சமூக ஆர்வலர்கள் உதவியுடன்
குமரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று
மனு கொடுத்தார்
முதியோர் நலம் காக்கும் சட்டப்பிரிவு ஐந்து மற்றும் 23 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஆசை வார்த்தைகளை கூறி
என்னிடமிருந்தும்
எனது கணவரிடம் இருந்தும் சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொண்டு என்னையும் எனது கணவரையும் பராமரிக்காதால் எனது கணவர் மனுவேல் மனவேதனையில் உயிரிழந்து விட்டதால்
தற்போது நான்
நல்ல உடைகள் இல்லாமலும் மருத்துவ வசதி இல்லாமலும் உணவு இல்லாமலும் சிரமப்பட்டு வருகிறேன். இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுக்க என அழைத்து வந்தனர் .எனவே மாவட்ட நிர்வாகம்என்னையும் என் கணவரையும் ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து விட்டு நடுத்தெருவில் தள்ளிய பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
எது எப்படியோ பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நடக்கும் சொத்து பிரச்சனையில் காவல் நிலையங்கள் தலையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி காவல் நிலையத்தில் 92 வயது மூதாட்டி தங்கி இருந்த வீட்டை பூட்டி சாவி வாங்கித் நரி குளம் ஜெயநாயகன் மகள் ஜெயந்தி ராணி புகார் கொடுத்ததன் அடிப்படையில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு அதன் பின்பு தான் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஈவு இரக்கமின்றி வயதான மூதாட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்ப காவல் நிலையம் நினைத்தால் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் உதவியாளர் மீது குறை ரீதியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்.

Related Articles

2 Comments

  1. Sir, this case has been dismissed by collector as false allegation by family members ( Daughters of the old lady, a layer from Kulathoor) with a motive to get a house and other properties.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button