Watch கடன் கொடுத்த விவசாயிகளிடம் நூதன மோசடியில் வசூல் செய்யும் தேனி பிசிபட்டி CHOLA தனியார் வங்கி!விவசாயி வீட்டில் நிறுத்தி வைத்துள்ள டிராக்டரை குண்டர்களை வைத்து எடுத்துச்செல்லும் அதிர்ச்சி வீடியோ!”ரிசர்வ் வங்கி உத்தரவை காற்றில் பறக்க விட்ட தனியார் வங்கிகளுக்கு உடந்தையாக தேனி மாவட்ட காவல்துறை!?on YouTube
சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில் குறிப்பாக நிலுவை தொகைக்காக, கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடனை வசூலிக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்படும் நியாயமற்ற மீட்பு நடைமுறைகள் மற்றும் கடன் வசூல் முகவர்களால் பயன்படுத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான எதிராக அதிகரித்து வரும் புகார்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கை வழிகாட்டுதல்களின் வரம்பை நீட்டித்துள்ள, அதே நேரத்தில் கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் அழைப்பதற்கான நேரத்தையும் கட்டுப்படுத்துகிறது.
காலாவதியான கடன்களை வசூலிக்க லோன் ரெக்கவரி ஏஜென்ட்ஸ் வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதில்லை என்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் அதன் ஒழுங்குமுறை வரம்புக்கு உட்பட்ட பிற நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் பழனி செட்டி பெட்டி யில் இயங்கிவரும் CHOLA ( cholamandalam investment and finance company)தனியார் வங்கி விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்களுக்கு கடன் வழங்கிவிட்டு ரிசர்வ் வங்கி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் வரம்பு மீறி குண்டர்களை வைத்து வீட்டிற்கு வந்து கடன் வசூல் செய்து வருவதாக தேவாரம் காவல் நிலையத்தில் பார்த்தசாரதி என்ற விவசாயிபுகார் கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஐந்து மாதத்திற்கு முன்பே சதீஷ் என்ற விவசாயி (அணைப்பட்டி என்ற நாளைய கவுண்டன்பட்டி)21/03/22 அன்று தேனி மாவட்ட ஆட்சியாளரிடம் கடன் கொடுத்த சோழமண்டல வங்கி ஊழியர்கள் குண்டர்களை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுவதாக புகார் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு புகார் மீது விசாரணை செய்ய உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் உள்ள உதவி காவல் ஆய்வாளர் விவசாயி சதீஷ் அழைத்து நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்கள் நீங்கள் புகார் கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்வேன் இல்லையென்றால் நீங்கள் நீதிமன்றம் செல்கிறேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியதாக தகவல் வந்துள்ளது. பொதுமக்களுக்கு காவல்துறை நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தன்னுடைய அதிகார துஷ்பூரியத்தை பயன்படுத்தி உள்ளார் அந்தக் காவல் உதவி ஆய்வாளர். 20000 ரூபாய் கொடுக்க என்னால் முடியாது என்று விவசாயி சதீஷ் கூறியதுடன் வேறு வழியின்றி வந்து விடுகிறார். அதன் பின்பு அதே வங்கி ஊழியர் 10 குண்டர்களே அழைத்து சதீஷ் விவசாயி டிராக்டர் இருக்கும் இடத்திற்கு சென்று கேட் பூட்டை உடைத்து கேட்டை திறந்து டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர் அப்போதும் காவல்துறையினர் வங்கி ஊழியர்களுக்கு சாதமாக செயல்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.
அந்தப் புகாரில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளது. (cholamandalam investment and finance company )தனியார் வங்கி விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது 1.7 சதவீத வட்டி என்று கூறிவிட்டு அதன் பின் 1.9 சதவீத வட்டி என்று நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொன்று அதைவிட அதிர்ச்சி தரும் தகவல் 20 தவணை 60 மாதம் என்று கடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு ஒரு வருடம் ஆன பின்பு 25 தவணை கட்ட வேண்டும் என்று கடன் வாங்கிய விவசாயி வீட்டில் 10 குண்டர்களை வைத்து கலெக்ஷன் மேனேஜர் என்ற கார்த்திக் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒரு தவணை கட்டாமல் இருக்கும் விவசாய இடம் 4 தவணை பாக்கி இருப்பதாகவும் நூதன மோசடியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. தற்போது விவசாயிகளிடம் நூதன மோசடியில் cholamandalam investment and finance company தனியார் வங்கி நடந்து கொள்வதாக காவல் நிலையத்தில் மற்றும் ரிசர்வ் வங்கி ஆணையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் கடன் வழங்கிய சோல மண்டலம் தனியார் வங்கி நிறுவனத்திற்கு காவல்துறையினர் ஆதரவாக இருப்பதாகவும் விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருக்கும் டிராக்டர் இருக்கும் இடத்திற்கு அடியாட்களை அனுப்பி cholamandalam investment and finance company வங்கி நிறுவன ஊழியர்கள் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து டிராக்டரை அத்துமீறி எடுத்துச் செல்லும் வீடியோ காட்சி பதிவும் அரங்கேறியுள்ளது. ஆனால் இதற்குக் காரணம் காவல்துறையினரே உடந்தை என்றும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இவையெல்லாம் ரிசர்வ் வங்கி வழிமுறைகளை அறிவித்த பின்பு அரங்கேற்றிய நிகழ்வுகளாகும். ஆகவே விவசாயிகளிடம் கடன் கொடுத்துவிட்டு நூதன மோசடி செய்வதுடன் குண்டர்களை வைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து கடன் வசூலில் ஈடுபடும் நபர்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனே விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாகும்.
வங்கிகள், NBFC-க்கள் மற்றும் ARC-க்கள் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள ரிசர்வ் வங்கி, கடன்களை திரும்பப் பெறுவது தொடர்பான தனது அறிவுறுத்தல்களில் இருந்து ரெக்கவரி ஏஜென்ட்ஸ்கள் விலகி செல்வதை பல சம்பவங்கள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது .
லோன் ரெக்கவரி ஏஜென்ட்ஸ்களின் செயல்பாடுகளால் கடன் வாங்கியோருக்கு எழும் கவலைகளை கருத்தில் கொண்டு, கடன் கொடுத்த வங்கிகள் அல்லது நிறுவனங்கள் தங்களது ஏஜன்ட்ஸ்களை கொண்டு கடனை வசூலிக்கும் முயற்சிகளின் போது எந்தவொரு நபருக்கும் எதிராக வாய் மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எவ்வித மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யப்படாது என்பதை ஒழுங்குமுறை நிறுவனங்கள் கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடன் வாங்கியவர்களை தொலைபேசியில் அழைப்பதற்கான நேரத்தையும் ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நிலுவை கடனை திரும்ப பெறுவதற்காக கடன் வாங்கியோருக்கு கால் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது
.எந்தவொரு வடிவத்திலும் கடன் வாங்கியவர்களுக்கு தகாத செய்திகளை அனுப்ப கூடாது, அச்சுறுத்தல் அல்லது மிரட்டல் அழைப்புகளை மேற்கொள்ளுதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய வழிமுறைகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ARCs) மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
நள்ளிரவை கடந்தும் வாடிக்கையாளர்களை ரெக்கவரி ஏஜென்ட்ஸ்கள் தொடர்பு கொள்வதாக புகார்களைப் பெற்றுள்ளோம். அவர்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.இதை ஏற்று கொள்ள முடியாது மேலும் குறிப்பிட்ட நிதி நிறுவனங்களின் நற்பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. விரைவில் உரிய வழிமுறைகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் ஏற்கெனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தற்போது தேனி பிசி பட்டியில் இயங்கும் cholamandalam investment and finance company கடன் வழங்கும் தனியார் வங்கி தற்போது விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க வழங்கிய கடன் தொகையை வசூலிக்க குண்டர்களை பயன்படுத்தி விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ள டிராக்டரை அத்துமீறி எடுத்துச் செல்வதை வைத்து விவசாயி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் சோழ தனியார் வங்கி நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் நடந்து கொண்டு அத்துமீறி எடுத்து வந்த டிராக்டரை கடன் வழங்கிய தனியார் வங்கி நிறுவன ஊழியர்களிடமே கொடுத்து அனுப்பியதாக தற்போது தேனி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக டிஜிபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆணையத்திற்கு புகார் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாதத்தில் இரண்டு மூன்று முறை விவசாயிகள் குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடக்கிறது .ஆனால் குறை தீர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் எந்த அளவிற்கு முழுமையாக நிறைவேற்றப்படுகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் இதுபோன்ற விவசாயிகள் தனியார் வங்கிகள் இடம் கடன்களை கட்டச் சொல்லி வங்கிகள் குண்டர்களை அனுப்பி நெருக்கடி கொடுப்பதை தடுக்க தேனி மாவட்ட ஆட்சியாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
Tags:
Bank Loan, Loan, Personal Loan, RBI