Watch “கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மகளிர் தின விழாவில் தமிழர் கலாச் சாரத்தையே கேலிக்கூத்தாக்கி குத்தாட்டம் போட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அதிர்ச்சி வீடியோ! ! on YouTube
மகளிர் தின விழா என்ற பெயரில் தமிழர் கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்கியதாக குத்தாட்டம் போட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது தற்போது சமூக ஆர்வலர்கள் விமர்சனம்!
8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதில் அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச் சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துக் களைத் தெரிவித்து
பேசிய முதவர் பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திரு நாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே!” என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம் என கேட்டுக் கொண்டார்.
அதே போல் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் பேசியபோது பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள்தான். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம்தான் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடந்த சர்வதேச மகளிர் தின அரசு விழாவில் தமிழ் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை கேலிக் கூத்தாக்கும் வகையில் தமிழ் திரைப்படத்தில் வரும் குத்துப் பாடல்களை ஒலி பெருக்கியில் குத்தாட்டம் போட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு சார்பாக தமிழக முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் நடந்தது. அப்படி நடக்கும் சர்வதேச மகளிர் தின விழாவில் அந்தந்த மாவட்டத்தில் மகளிர்களின் சேவைகளுக்காக விருதுகளை வழங்கி அரசு விழாக்களில் கலந்து கொண்ட தமிழ் சொற்பொழிவு பேச்சாளர்கள் மகளிர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்ல கருத்துக்களை பேசாமல் சர்வதேச மகளிர் தின விழாவில் திரைப்படங்களில் வரும் குத்துப் பாடல்களை ஒளிபரப்பி அந்தப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் வீடியோவில் மாவட்ட ஆட்சியாளர் ஆடுவதை பொதுமக்கள் பார்க்கும் போது முகம் சுளிக்கும் அளவிற்கு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் சமூக ஆர்வலர்கள் ஆட்சியாளர் மீது விமர்சனத்தை தெரிவித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. கலை நிகழ்ச்சி என்ற பெயரில் குத்தாட்டம் போட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் கோட்டாட்சியர் இவர்கள் மூன்று பேர் மீதும் துறை ரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு முதன்மை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் நேரில் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் இனிமேலாவது பொதுமக்களின் குரலுக்கு செவி சாய்த்து கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்பார!? இந்திய ஆட்சிப் பணியை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!