Watch “கிராம சபை கூட்டத்தில் வரப்பு வெட்டியதற்கு 6 லட்சம் கணக்கு சொன்ன ஆவணத்தை கேட்டு வீடியோ பதிவு செய்த பெண்ணை ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டும் அதிர்ச்சி வீடியோ!” நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?on YouTube
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளில் நடந்த வேலை மற்றும் அதன் செலவுகளை பொதுமக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர்.
அணைத்து ஊராட்சி மன்றங்களில் நடக்கும் அனைத்து வேலையும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அதுபோல் ஊராட்சிகளில் ஒதுக்கப்பட்ட மொத்த திட்டங்கள் எத்தனை எவ்வளவு பணம் என்பதையும் விளக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பல ஊராட்சி மன்றிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சரியாக பதில் சொல்லாமல் ஆவணங்களை கொடுக்காமல் மிரட்டியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரு பெண்ணை மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது அந்த வீடியோவில் ஒரு பெண் 6 லட்சம் செலவு செய்ததை வாசித்துள்ளீர்கள் அதனுடைய ஆவணத்தை எங்களிடம் காட்டுங்கள் நாங்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்று கூறும்போது அந்த அதிகாரி ஆவணம் யாரிடமும் காண்பிப்பதில்லை என்றும் படித்து மட்டும் தான் காண்பிப்போம் என்றும் மறுபடி மறுபடியும் கேட்ட பெண்ணிடம் அது தவறாக சொல்லிவிட்டேன் என்று முரண்பட்ட பதில்களை சொல்லி வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் குறிப்பிட்டு பெண்ணை வீடியோ எடுக்க கூடாது என்று ஆவணங்களை தர முடியாது என்றும் பெண்ணை மிரட்டி உள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பறவை வருகிறது இது சம்பந்தமாக ஊரக வளர்ச்சி மேம்பாட்டு செயலர் சமுதாய அவர்கள் புகார் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இது எப்படியோ வெளிப்படை தன்மையாக நடக்க வேண்டிய கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களை மிரட்டும் இந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் பொதுமக்களிடம் ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தான் நிதர்சனம்.