Watch “சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளயை பாரக்க வந்தவர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் பணி செய்யும் ஐந்து காவலர்கள் தாக்கியதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!” on YouTube
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியாக இருந்த நண்பரை பார்க்க சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் சென்றுள்ளார்.அந்த நேரத்தில் யாரோ ஒரு நபரை தாக்கி விட்டு சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மூன்று நபர்கள் திடீரென்று உள்ளே வந்து அவசர பிரிவில் உள்ள படுக்கையில் படுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் ஐந்து காவலர்கள் (அசோக்குமார்,பூபலன்,சீனிவாசன், தில்லை நடராஜன் செந்தில் )அவசரச் சிகிச்சைப் பிரிவு உள்ளே அவசர அவசரமாக உள்ளே வந்து படுத்திருந்த நபர்களை வெளியே வருமாறு கூறியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அருகில் இருந்த இளங்கோவன் மற்றும் அவருடன் வந்த நண்பரை பார்த்து நீங்கள் எங்களை செல்போனில் வீடியோ எடுக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் அருகிலுள்ள நோயாளியைப் பார்க்க வந்தோம் என்று சொல்லியும் கேட்காமல் அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை அவதூறாகப் பேசியது இல்லாமல் செல்போனையும் பிடுங்கி கீழே போட்டு உடைத்து விட்டு சென்றுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட இளங்கோவன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடந்த உண்மையை கூறி 5 காவலர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர் .
இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளதாக இளங்கோவன் கூறியுள்ளார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இளங்கோவன் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினர் இப்படி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அராஜகமாக நடந்து கொள்வதுதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்றும் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டினார். எது எப்படியோ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஆகும்.
But nobody will leave the bridge I m shooting also that damned Square structure I pulled