Watch “சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சிக்கு வந்தவர்களிடம் பட்டாகத்தி வைத்து தாக்கி செல் போன் பறித்து சென்ற ரவுடிகளின் அதிர்ச்சி வீடியோ!” கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு காவலர் கூட இல்லை அச்சத்தில் பொதுமக்கள்! on YouTube
மெரினா கடற்கரையில் அமர்ந்திருந்த இளைஞரை கத்தியால் தாக்கி மொபைல் போன் வழிப்பறி…
திருமுல்லைவாயலைச் சேர்ந்த போட்டோ ஷூட் நடத்தி வரும் இளமாறன்(23) என்பவர் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றுக்காக திருவல்லிக்கேணி வந்துள்ளார்.
நிகழ்ச்சி முடித்து பின் மெரினா கடற்கரைக்கு தனது நண்பர்களோடுசென்று “நம்ம சென்னை” போர்டு பின்புறம் அமர்ந்திருந்த போது ரவுடிகள் கத்தியால் இளமாறனின் கையை வெட்டி அவரது மொபைல் பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காயம்பட்ட இளமாறன் சிகிச்சைகாக ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியால் தாக்கி மொபைல் போன் பறித்துவிட்டு பின்பு பட்டாக்கத்தியை காட்டி மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி செல்லும் மர்ம நபர்கள் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு காவலர் கூட பாதுகாப்புக்கு இல்லை என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
எப்போதுமே மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு பாதுகாப்புக்கு காவலர்கள் அதிகமாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் தமிழக டிஜிபி அலுவலகம் முன்பு இது போன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது தான் வேதனைக்கு உள்ளானதாகும். சில நாட்களாக சென்னை மற்றும் தமிழகத்தில் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி என்ன செய்வது அறியாது பணத்திற்காக பொதுமக்களிடம் பட்டாக்கத்திலிருந்து மிரட்டி செல்போன் பணம் பறிப்பது மட்டுமில்லாமல் கொலை செய்யவும் துணிந்து உள்ளார்கள் என்பது தான் தற்போது நிதர்சனமாக உள்ளது. இது எப்படியோ தமிழக டிஜிபி அலுவலகம் முன்பே இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது சட்ட ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்பதுதான் சமூக அறிவியல் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது. ஆகவே தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்களில் நடப்பதை தடுக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் காவல்துறையின் நடவடிக்கையை…