Watch “தமிழக கேரளா எல்லையில் உள்ள பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் 24 மணி நேரம் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ” on YouTube
தமிழக கேரளா எல்லையில் உள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் வைத்து 24 மணி நேரம் அமோக விற்பனை!! கல்லா கட்டும் பொள்ளாச்சி ஆனைமலை மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!? கண்டுகொள்ளாத கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? தமிழக டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா!?
கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில் கோவிந்தாபுரம்
செக் போஸ்ட் உள்ளது.
இந்த செக் போஸ்ட் அருகே உள்ள பெட்டிக்கடையில் 24 மணி நேரமும் போலி மது பாட்டில்கள் அமோகமாக விற்பனை நடந்து வருகிறது என்ற அதிர்ச்சி வீடியோ வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து ஒரு வருடமாகியும் தற்போதும் தடைசெய்யப்பட்ட போலி மது விற்பனை, கஞ்சா விற்பனை , கேரளா ஆன்லைன் லாட்டரி மற்றும் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை ரேசன் அரிசி கடத்தல். இது போன்ற சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்.
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட போதை பொருள் மற்றும் போலி மதுபாட்டில்கள் விற்கும் சமூக விரோதிகளிடம் மாதம் மாமூல் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் காவல்துறையினர் பெற்றுக்கொண்டு உடந்தையாக செயல்படுவதாக தொடர்ந்து வரும் குற்றச்சாட்டு தான் இதற்கு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழ்நாட்டிலே கோவை மாவட்டத்தில் தான் அரசுக்கு எதிரான சட்டவிரோதமான செயல்களை சமூக விரோதிகள் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக பரவலாக செய்தித்தாள்களிலும்
அதுமட்டுமில்லாமல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு சமூக ஆர்வலர் மூலம் புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
சட்ட விரோதமாக போலி மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக இருந்து கொண்டு கல்லாக்கட்டும் மதுவிலக்கு காவல் துறையினர் மாற்றும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு பாதுகாப்பு காவல் துறையினர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
எது எப்படியோ தமிழக டிஜிபி போட்ட உத்தரவை மதிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய போலி மது பாட்டில் சட்டவிரோதமான விற்பனை செய்யும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருக்கும் கோவை மாவட்ட பொள்ளாச்சி ஆனமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மதுவிலக்கு பிரிவு காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் மீது துறை ரீதியான உச்ச கட்ட நடவடிக்கையான தற்காலிக பணிநீக்கம் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய எந்தப் பாரபட்சமும் இன்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர் கோரிக்கையாகும் .