மாவட்டச் செய்திகள்

Watch “திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறைக்கு மாதம் பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து கடத்தல்!” on YouTube

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளபட்டி சிப்காட் பின்புறம் உள்ள குலலக்குண்டு மாலைய கவுண்டம்பட்டி கிராமத்துக்குட்பட்ட மலை அடிவாரத்தில் சட்ட விரோதமாக அனுமதியில்லாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை வெடிவைத்து வெட்டி எடுத்து கடத்தி வருகின்றனர் என்று பத்திரிகை அலுவலகத்திற்கு  தகவல் கொடுத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக பல அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி வெட்டி எடுத்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தல்

இது சம்பந்தமாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தால் அங்கு சர்வ சாதாரணமாக வெடிவைத்து தகர்த்தி கனிம வளங்களை கடத்திக் கொண்டிருக்கும் அதிர்ச்சி காட்சிகளை கண்டு வியந்து போனோம். அதுமட்டுமில்லாமல் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் இடத்தின் மிக அருகில் உயர்மின் கோபுரம் உயர்மின் கோபுரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரம் எந்த ஒரு அனுமதியும் இல்லை என்று கனிமவளத் துறையில் கூறப்பட்டுள்ளது அதுவும் மட்டுமில்லாமல் சாலை அருகே 500 மீட்டர் தூரத்திற்கு கனிம வளங்கள் வெட்டி எடுக்கக் கூடாது என்று கனிமவளத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கதுஇது சம்பந்தமாக அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்த போது இது பல வருடங்களாக நடக்கின்றது. சட்டவிரோதமாக கனிமங்களை கனிம வளங்களை கடத்தும் இந்த இடத்திற்கு  எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் சட்டத்திற்கு விரோதமாக அளவுக்கு அதிகமான மருந்துகளை வைத்து வெடி வைப்பதால் அருகில் ஐந்து கிலோ மீட்டர் வரை அந்த அதிர்வுகள் காணப்படுவதாகவும் குடியிருப்புகளில் அதிர்வு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக கனரக வாகனங்களில் (ஒரு கனரக வாகனத்தில்50 டன் குறையாமல்) கனிம வளங்களை ஏற்றிச் செல்வதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகின்றது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். 200 அடிக்கு மேல் வெட்டி எடுக்கப்பட்ட இந்த இடத்திற்கு அதிகாரிகள் வராமல் இருக்க மாதம் பல லட்ச ரூபாய் கப்பம் கட்டுவதாக அதிர்ச்சி தகவல் தெரிகிறது. திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குனருக்கு மட்டும் பல லட்சம் ரூபாய் மாதம் இந்த குவாரியிலிருந்து கொடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட கனிம வள த்துறை உதவி இயக்குனரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார். அதன்பின்பு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய வாட்ஸப் நம்பரை கேட்டு அந்த நம்பருக்கு அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ளோம் . திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குவாரிகளில் இதுபோன்ற சட்ட விரோதமாக கனிம வளங்களை கேரள மாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதுபோன்று மலை அடிவாரங்களில் அளவுக்கு அதிகமாக ஆழம் தோண்டி கனிம வளங்களை வெட்டி எடுத்து சட்ட விரோதமாக கடத்துவதால் விளைநிலங்கள் பாதிப்படைவதும் இல்லாமல் மலையில் இருக்கும் விலங்குகள் மற்றும் மலைகளில் மேயும் ஆடு மாடுகள் இது போன்ற பெரும் பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயமும் அவ்வப்போது நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ இயற்கை சூழ்ந்துள்ள மலைகளின் அருகில் பட்டா நிலங்கள் வைத்துள்ள ஒரு சிலர் அனுமதி என்ற பெயரில் கனிம வளங்களை சட்டவிரோதமாக தோன்றி எடுத்து கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. ஆகவே கனிமவளத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையிட வேண்டும் என்றும் கனிமவளத்துறை அதிகாரிகளின்   வீடு மற்றும் அவர்கள் உறவினர்கள் வீடுகளில் வஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதுதான் நிதர்சனம்.

2015 ஆம் ஆண்டு 16,000 கோடிரூபாய் அளவுக்கு மதுரை
மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட்
குவாரி முறைகேடு தொடர்பாக
விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி
சகாயம் தலைமையிலான குழு தனது 600 பக்க
அறிக்கையை இன்று சென்னை உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்த இந்த
முறைகேட்டில் அதிகாரிகள் பலருக்கு
தொடர்பு உள்ளது என்றும், இது
தொடர்பாக சி.பி.ஐயின் கீழ் சிறப்பு
புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி,
கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல், மதுரையில்
முகாமிட்டு, கிரானைட் முறைகேடுகள் குறித்து,
சகாயம் விசாரணை நடத்தினார். 21
கட்டங்களாக சகாயம் விசாரணை
நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதை மறந்து விட்டு தற்போது பழைய குருடி கதவை திருடி என்ற பழமொழிக்கேற்ப தமிழக முழுவதும் கனிம வளங்கள் அழைக்கப்படுவது தான் நிதர்சனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button