Watch தேனி”புல்லட் திருடியதாக விசாரணை என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் நிலையத்தில் வைத்து கேலி கிண்டல் செய்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட தேனி பழனி செட்டிப்பட்டி ஆய்வாளர் மதன கலா!?? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? on YouTube
காவல் நிலையமா!? காமெடி நிலையமா!??
தேனி மாவட்டம் தேனி பழனி செட்டிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் மதன கலா சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பதிவில் ஒருவரை பேச வைத்துள்ளார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசிக் கொண்டுள்ளார் அதைக் கேட்டுக்கொண்டு ரசித்துக்கொண்டு வீடியோ பதிவு செய்துள்ளார். இது சட்ட விரோதமான மனித உரிமை மீறல் செயலாகும் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் ஒருவரை விசாரணை செய்யும்போது அது ரகசியம் காக்கப்பட வேண்டும் ஆனால் காவல் ஆய்வாளர் திருட்டு வழக்கில் ஒருவரை பிடித்தது போல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவரை அழைத்துவந்து விசாரணை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது மனித உரிமை மீறல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காவல் ஆய்வாளர் மதன கலா (மாவீர கலா) மீது பணி செய்த காவல் நிலையத்திலேயே 8 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.சில வருடங்கள் முன்பு 2019/ஜூலை பெரியகுளம் தென்கரை காவல் நிலையம் காவல் ஆய்வாளராக மதனகலா பணியில் இருந்தபோது திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி வந்த போது தேனி அல்லி நகரத்தில் உள்ள அவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை காவல் ஆய்வாளர் மதன கலா எடுத்துச் சென்றுவிட்டதாக அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாகவும் அதன்பின் நீதிமன்றத்தில் மதன கலா ஆய்வாளர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு அதில் திருட்டு வழக்கு ஒன்றும் பணி செய்த தென்கரை காவல் நிலையத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் மற்றொரு வழக்கும் இவர் மீது பணி செய்த காவல் நிலையத்திலேயே பதிவு செய்யப்பட்டது. அதே போல் புல்லட் பாண்டி என்பவர் மாற்றுத்திறனாளி அவர் ஒரு வழக்கறிஞர் ஏதோ ஒரு வழக்கில் காவல்துறை என்னை கைது செய்து பாருங்கள் என்று வாட்ஸாப்பில் பேசியதை வைத்து அவரை பெரியகுளம் பஜாரில் கடைக்கு வந்த போது பெரிய தாதாவை கைது செய்தது போல் பில்டப் கொடுத்து கைது செய்துவிட்டதாக பெருமையாக அந்த செய்தியை அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து வெளியிடச் சொன்ன விளம்பரப் பிரியர் தான் இந்த மனுக்கள் ஆய்வாளர் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வந்தார்கள்.அதன்பின் இவர் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார் ஆனால் அப்போது இருந்த அதிமுக முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது தம்பி ராஜாவின் ஆதரவால் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளராக பணி மாறுதல் பெற்று கொண்டு சென்றுவிட்டார் ஆனால் இவர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் தற்போது வரை விசாரணையில் இருந்து வருகிறது.
எது எப்படியோ இவர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் செய்த குற்றங்களை மறைக்க அதிகாரம் படைத்த காவல்துறை உயரதிகாரிகள் கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற சட்ட விரோதமாக மனித உரிமை மீறல்களை அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் எது எப்படியோ இந்த வீடியோ பதிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்கள் பார்த்து பின் மனசாட்சி இடம் கொடுத்தால் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் அனைவரின் கோரிக்கையாகும்!