Watch “நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் குடும்பம் குழந்தை உள்ளது உணர்ச்சி உள்ளது ! போராட்டத்தில் அநாகரிகமாக பேசிய இந்து முன்னணி கட்சி நிர்வாகியை எச்சரித்த காவல் ஆய்வாளர்” on YouTube
இந்து முன்னணி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்த போது கட்சியின் வயதான மூத்த நிர்வாகி பேசியபோது காலையிலிருந்து மாலை வரை ஒருவரை கைது செய்ய தெம்பு திராணி இல்லாமல் அதுக்கும் மேலாக பேச கூடாத சொல்லக்கூடாத ஒரு வார்த்தையை பேசிய உடன் பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் ஆய்வாளர் அந்த வயதான இந்து முன்னணி நிர்வாகிகள் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது உணர்ச்சி உள்ளது நீங்கள் அநாகரிகமாக காவல்துறையை பற்றி பேசுவதை கேட்டு அமைதியாக இருந்தால் இதை பார்க்கும் பொதுமக்கள் எங்களை என்ன நினைப்பார்கள் என்று எங்களுக்கும் தெரியும் .தமிழ்நாடு முழுவதும் காவல்துறை என்பது ஒன்றுதான் திருப்பூருக்கு ஒரு காவல்துறை திருநெல்வேலிக்கு ஒரு காவல்துறை என்று தனித்தனியாக இல்லை ஆகவே தயவு செய்து நாகரீகத்துடன் கண்ணியத்துடனும் காவல்துறையினரை பேசும்போது நாவடக்கமாக பேசுமாறு காவல் ஆய்வாளர் எச்சரித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வளங்களில் வேகமாக பரவுதுடன் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர் என்ற தகவல் வந்துள்ளது. தைரியமாக காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டதற்கு நாமளும் அவருக்கு வாழ்த்து சொல்லிக் கொள்வோம்.