Uncategorizedஆன்மீகத் தளம்

Watch “பக்தர்களிடம் 500 ,1000 ரூபாய் கேட்டு ரவுடிகளை வைத்து மிரட்டும் அதிர்ச்சி வீடியோ!! கண்டுகொள்ளாத நிலக்கோட்டை காவல்துறை!?அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை!?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் உள்ளது அணைப்பட்டி கிராமம்.
அணைப்பட்டி ஆஞ்சநேயரின் அருளை பெறுவதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். திண்டுக்கல்லில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், நிலக்கோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் அணைப்பட்டி உள்ளது.

இங்கு சித்தர்கள் மலை அடிவாரத்தை தழுவியபடி வைகை ஆறு செல்கிறது. அந்த ஆற்றின் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஆஞ்சநேயர்.

அனைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில்


மனக்கஷ்டத்தில் வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து ‘அணைப்பட்டி ஆஞ்சநேயர்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.தற்போது அது அற்புதமாக வளர்ந்து வருகிறது. வைகை ஆற்றில் தாழம்செடியின் அடியில் சுயம்புவாக தோன்றியதால், வைகை ஆற்றின் நீரே தீர்த்தமாக கருதப்படுகிறது. கோவில் வளாகத்தில் மூலவர் சன்னிதி அருகே ஒரு அபிஷேக கிணறும் உள்ளது. அதன் தண்ணீரையே ஆஞ்சநேயரின் அபிஷேகத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
தன்னை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுப்பவராக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கு வரும் பக்தர்கள் உத்தியோக தடையை போக்கவும், பணியிட மாறுதல் கேட்டும் வேண்டுதல் செய்கின்றனர். இதுதவிர திருமண தடை, செவ்வாய் தோஷம் ஆகியவை விலகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயரை வேண்டி செல்பவர்களும் ஏராளம். இதற்காக ஆஞ்சநேயருக்கு வடைமாலை, துளசி மாலை, எலுமிச்சை மாலை, பலவகை பழங்களால் ஆன மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு செய்கின்றனர். சனி தோஷம் நீங்குவதற்கு சனிக்கிழமை விரதம் இருந்து அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். பின்னர் ஆஞ்சநேயருக்கு கறுப்பு ஆடை அணிவித்து, பிரார்த்தனை செய்வதால் சனி தோஷம் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
தை, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யவும் இங்கு பலர் வருகின்றனர் . பின்னர் ஆஞ்சநேயருக்கு கறுப்பு ஆடை அணிவித்து, பிரார்த்தனை செய்வதால் சனி தோஷம் நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
தை, புரட்டாசி மாத அமாவாசை தினங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கோர் தங்கள் குடும்பங்களுடன் வருகின்றனர்.
குடும்பங்களுடன் வரும் பக்தர்கள் கோவில் சுற்றியுள்ள வளாகத்தில் அமர்ந்து சமைத்து சாப்பிட்டு ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர்.
கோவில் சுற்றியுள்ள வளாகத்தில் சமைத்து சாப்பிட கோவில் நிர்வாக ஊழியர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமாக 100 ரூபாய் டோக்கன் கொடுத்து 500 ,1000 ரூபாய் கேட்டு மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100 ரூபாய் தான் இதுவரை கொடுத்து வந்துள்ளோம் தற்போதைய 500 ரூபாய் கேட்கிறீர்கள் என்று கேட்டால் இது கோவில் இடமில்லை என்றும் இது தனியாருக்கு சொந்தமான பட்டா இடம் என்பதால் நீங்கள் இங்கு சமைத்து சாப்பிட 500 ,1000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவோம் .இல்லை என்றால் இடத்தை விட்டு காலி செய்யுங்கள் உங்களை யார் கோவிலுக்கு வர சொன்னார்கள் என்று மிரட்டி வருவதாகவும் தற்போது அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஆகவே தங்கள் மனக் கஷ்டத்தை போக்க கோவில்களுக்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு தங்கள் நேற்று கடனை செலுத்த வந்த பக்தர்களிடம் இப்படி ரவுடிகளை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் அணைப்பட்டி கோவில் நிர்வாக அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வரும் ஒரு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் நிலைதற்போது மாறி உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் பணத்தையும் பெற்றுக் கொண்டு கோவில் நிர்வாகம் குடிநீர் வசதியை செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.கோவிலை சுற்றி பல இடங்களில் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற மின்றி குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் அச்சமும் பக்தர்களுக்கு உள்ளது.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட இடவசதியும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்து கொடுத்தால் மட்டுமே இது போன்ற பணம் பறிக்கும் ரவுடிகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்ற முடியும் மற்றும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்து வீட்டிற்கு செல்ல முடியும் என்பது தான் நிதர்சனம்! உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையும் தமிழக அரசும் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button