காவல் செய்திகள்

Watch “பட்டாக்கத்தி வைத்து வெட்ட வந்த ரவுடியின் அட்டகாசம்! நூலிழையில் உயிர் தப்பிய பெண் அதிர்ச்சி வீடியோ !!” குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டுவதும், சுவர் ஏறி குதிப்பதும் போதையில் சுற்றித்திரியும் ரவுடி அஜித்தின் வாடிக்கையாக உள்ளது.
போதையில் நிர்வாண நடனம் ஆடுவது
தட்டிகேட்டாள் அடிப்பதும், கொலை மிரட்டல் விடும் ரவுடியின் அட்டகாசம். குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டம்
பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட
தெள்ளாந்தியில் நன்ளிரவில் பரப்பரப்பு
கஞ்சா போதையில்
நிர்வாண நடனம் ஆடுவது
தொடர் பாலியல் தொல்லை கொடுக்கும் பட்டாகத்தி வைத்து வெட்ட வந்த ரவுடியிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஆசிரியை!!
கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்
பூதப்பாண்டி காவல் நிலையம்தெள்ளாந்தி கலைஞர் நகரில் வசித்து வருபவர் அஜிதா
இரண்டு பிள்ளைகளின்
தாயான இவர் DMI பொறியியல் கல்லூரில் வேலை பார்க்கிறார்.
வழக்கம்போல் நேற்று இரவு தன்
வீட்டின் முன் இருந்து தன்னுடைய செல்போனில் உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென போதையில் வந்த ரவுடி அஜித் ஆவேசமாக வெட்டு கத்தியுடன் வேகமாக ஓடி வந்து ஓங்கி வெட்டவும்
சுதாரித்துக்கொண்ட பெண் அலறியடித்து
வேகமாக வீட்டுக்குள் ஓடி விட்டாள், உடனே வீட்டில் உள்ள கணவர் வெளியே ஓடி வந்து பார்க்கும் பொழுது போதையில் உள்ள ரவுடி சென்றுவிட்டான்.
இந்த சம்பவம் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு அந்த பெண் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,
போலீசார் கண்காணிப்பு கேமராவை பார்த்து ஆய்வு செய்து ரவுடி அஜித்தை
வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
D.N.ஹரி கிரண் அவர்கள்
வீடுதோறும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுரை
நல்ல விஷயம்தான் என அப்பகுதி மக்கள் சொன்னதோடு மட்டும்மல்லாமல் பெரும்பாலான வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதேபோல் தற்போது போதையில் வந்த ரவுடி அந்தப் பெண்ணை வெட்ட வந்த காட்சி
இந்த கண்காணிப்பு கேமிரா இல்லை என்றால் இந்த சம்பவம் பொய்யாக கூட மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே வீட்டிற்கு வீடு கண்காணிப்பு கேமரா பொறுத்தவேண்டும் என் தெரிவித்ததோடு இல்லாமல் கஞ்சா மற்றும் மது போதையில் சுற்றித்திரியும் ரவுடி குற்றவாளிகளையும் விரைவில் கண்டுபிடித்துவிடலாம்.
மேலும் இந்த ரவுடி அஜீத் கஞ்சா போதையில்
நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டுவதும், சுவர் ஏறி குதிப்பதும் இவரின் வாடிக்கையான செயல்,
போதையில் நிர்வாண நடனம் ஆடுவது
தட்டிகேட்டாள் அடிப்பதும், கொலை மிரட்டல் விடுவதுதான் இவரின் வேலை,
எனவே பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ரவுடியை
குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button