Watch “பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி கேட்டு பல வருடங்களாக போராடும் புதுக்கோட்டை மாவட்ட கிராமபொதுமக்கள்!” on YouTube கோமாவில் இருக்கும் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து மேலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!நடவடிக்கை எடுப்பாரா போக்குவரத்து துறை அமைச்சர்!?
புதுக்கோட்டை மாவட்டம் பணம்பட்டி ஊராட்சி மருதாந்தலையில் அரசினர் மேல்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள். படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியை சுற்றி சுமார் ஐந்த்திற்க்கும் மேற்பட்ட கிரமங்கள் உள்ளன. சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து இந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பேருந்தில் தான் வர வேண்டும். ஆனால் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கான சரியான நேரத்திற்கு அரசு பேருந்து வருவதில்லையாம். நேரம் கடந்து வருவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்கும் பேருந்து வசதி இல்லை என்றும் சரியான நேரத்திற்கு வராததால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து படிக்க வந்த மாணவிகள் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரம் பேருந்துக்கு காத்திருப்பதால் மாலை நேரம் என்பதால் ஒரு சில சமூக விரோதிகள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இரவு நேரம் ஆகி விடுவதால் பள்ளி மாணவிகள் அச்சத்துடன் வீட்டிற்கு செல்வதாகவும் இதனால் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பிள்ளைகள் வீட்டுக்கு வரும் வரை பயத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
மழைக்காலத்தில் மாணவிகள் சரியான நேரத்திற்கு வீட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாலும் இந்த ஊரில் உள்ள மக்கள் சரியான நேரத்திற்கு நகரப்புறத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருவதால்.ஊர் மக்கள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் போக்குவரத்து துறை பணிமனை மேலாளர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வரை கோரிக்கை வைத்து இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று ராமாயி. பச்சை சேலை.மீனாட்சி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி உடனடியாக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் உடனடியாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்குச் செல்ல தகுந்த நேரத்தில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.