Watch “போதைக்காக கத்தியை கையில் வைத்து கொலை மிரட்டல் விடும் இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!!” on YouTube
தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு சவாலாக இருப்பவர்கள் இளைஞர்கள் என்பதுதான் நிதர்சனம். போதைக்கு அடிமையாக உள்ள இளைஞர்களை காவல்துறை எப்படி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போகிறார்கள் என்பது ஆயிரம் மில்லியன் கேள்வியாக உள்ளது.
இனிமேல் டாஸ்மாக் போகும் போது பணத்துக்கு பதில் அரிவாள் இல்லன்னா கத்தி கொண்டு போனால் போதும் நமக்கு தேவையான சரக்கை வாங்கிக் கொண்டு வந்து விடலாம் என்ற மனநிலைக்கு தற்போது இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வேதனைக்குரியதாக உள்ளது. போதைக்கு அடிமையாகி தற்போது சிறு வயதிலேயே இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருவதாக தான் இந்த சம்பவம் காட்டுகின்றது. கஞ்சா மது மற்றும் பல போதை வாஸ்துக்களுக்கு அடிமையாக்கி தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி சமுதாயத்தில் சீரழிந்து வரும் இளைஞர்களே நலன் கருதி தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.