மாவட்டச் செய்திகள்

Watch “முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்த பெண்மணியை  தலையில் அடித்த வருவாய்த்துறை அமைச்சர் KKSSR!? அதிர்ச்சி வீடியோ வைரல்!  on YouTube

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் (09.07.2022) அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு பெண்மணி தன் தாய்க்கு 80 வயது ஆகிவிட்டதாகவும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் எனக்கு போதுமான வருமானம் உள்ளதால் என் தாய்க்கு முதியோர்  ஓய்வூதியம் கேட்டு கலாவதி என்ற பெண் மனு கொடுத்துள்ளார். அப்போது அமைச்சரிடம் அந்த பெண்மணி பலமுறை முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்தும் எதுவுமே நடக்கவில்லை என்றும் நீங்கள் தான் செய்து தருகிறீர்கள் என்று சொன்னீர்கள் என் தாய்க்கு முதியோர் ஓய்வூதியம் வேண்டும் என்று கூறினார் அப்போது அமைச்சர் அந்த மனுவை பெற்றுக் கொண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் இந்த மனுவுக்கு உடனே செய்து கொடுங்கள் என்று கூறினார்.ஆனால் அந்தப் பெண் மனு கொடுத்த உடன் அந்தப் பெண்ணின் தலையில் புகார் மனு கவரை வைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

அண்ணாமலை கண்டனம்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!’ இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.

இந்த வீடியோ காட்சியை வைத்து பிஜேபி கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.. இந்த வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தரப்பில் சொல்லி வந்த நிலையில் அந்த பெண்மணி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது அமைச்சர் எங்கள் உறவினர் என்றும் கோபத்தில் அடித்ததாக சொல்வது தவறு என்றும் என்னை அடிக்கவில்லை என்றும் நான் என் அம்மாவிற்கு கேட்ட முதியோர் பென்ஷன் மறு தினமே என் அம்மாவுக்கு வழங்குவதற்கு உத்தரவு வந்துவிட்டதாகவும் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை  வழங்கி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார்.இந்நிலையில் பிஜேபி கட்சியினர் ஆளுங்கட்சியின் மீது ஏதாவது குற்றச்சாட்டை கூற வேண்டும் என்று நினைத்து மக்கள் நலத் திட்டங்களை வழங்கி வருவதை திசை திருப்பவும் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் அமைச்சர்களுக்கும் தமிழக மக்களிடம் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையில் விமர்சனங்களையும் வீடியோ பதிவுகளையும் பிஜேபி கட்சியினர் வெளியிட்டு வருகிறார்கள் . இது எது உண்மை என்று தமிழக பொது மக்களுக்கு தெரியும் என்று திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button