மாவட்டச் செய்திகள்

Watch ” புதுக்கோட்டை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் ஐந்து பேர்  குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவல நிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் காரணமா!?புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பாரா!?on eYouTube

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி ஊராட்சியில் நலத்திட்டங்கள் மற்றும் வரவு செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2014 ஆண்டு வீரபட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட முடி திருத்தும் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள்  கேட்டுள்ளனர்.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஐந்து நபர்கள். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி கிராமம்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி வீரப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது. கல்லூரியின்  தாளாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதர் தெரசா கல்லூரியிலிருந்து வீரப்பட்டி ஊராட்சிக்கு ஆறு மாதமாக கட்ட வேண்டிய 12 லட்சம் ரூபாய் வரியை கட்டாமல் இருந்துள்ளனர். ஆகவே தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் வழங்கும் போது  மதர் தெரசா கல்லூரி 12 லட்சம் வரி கட்டாமல் இருப்பதை குறிப்பிட வேண்டும் என்பதற்காக வீரப்பட்டி ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் கிளர்க் மதர் தெரசா கல்லூரி தாளாளர் உதயக்குமாரை தொடர்பு கொண்டு தற்போது தகவல் அரியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஐந்து பேர் வரவு செலவு கணக்கு கேட்டுள்ளனர் .ஆகவே என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். உடனே மதர் தெரசா பள்ளி தாளாளர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் தூண்டுதலின் பெயரில்  வீரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரியின் கணவர் தங்கராஜ் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட அடியாட்களை அழைத்து கொண்டு  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட ஐந்து பேர் வீட்டிற்குள் நுழைந்து அடித்து உதைத்து வீட்டில் உள்ள பொருட்களை சேதம் செய்துவிட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் உடல் முழுவதும் காயங்களுடன்  அன்னவாசல் காவல் நிலையத்தில் 23/01/2015 அன்று புகார் கொடுத்துள்ளனர்.

முன்னாள் அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம். தற்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர்

அந்தப் புகாரின் பெயரில் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராஜ் மற்றும் மதர் தெரசா கல்லூரியின் தாளாளர் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் மீதும் அன்னவாசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் வழக்கு பதிவு செய்து சி எஸ் ஆர் (no.17/2015)போட்டுள்ளார்.

அதன் பின்பு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு எப்படியாவது வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்து பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் அதன் பெயரில் அன்னவாசல் காவல் ஆய்வாளராக இருந்த பாலசுந்தரம் 24/01/2015 அன்று  பாதிக்கப்பட்ட நான்கு பேர் மீது சுரேஷ்குமார் என்பவர் பெயரில்

பொய் புகார் ஒன்றை தயார் செய்து  மதர் தெரசா தாளாளர் உதயகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராஜ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து ஐந்து பேர் மீது வழக்கு போட்டு சி எஸ் ஆர் போட்டுள்ளார் (சி எஸ் ஆர் நம்பர் 18/2015).

புகார் கொடுத்ததாக சொல்லப்படும்  சுரேஷ்குமார் 23 /1/2015 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 08/02/2015 வரை மருத்துவ மனையில் இருந்துள்ளார். சுரேஷ்குமார் எப்படி புகார் கொடுத்தார் என்று பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளனர். அப்போது தான் தெரிகிறது அன்னவாசல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலியாக பொய்யான புகார் ஒன்றை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்பு எப்படியாவது காவல் ஆய்வாளர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இருந்துள்ளார். அந்த நேரத்தில் மதர் தெரசா கல்லூரியின் வாகனம் ஒன்று வீரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரியின்  கணவருடைய உறவினர் குமாரசாமி என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குமாரசாமி இறந்து விட்டார். அதற்காக சாலை மறியல் செய்ததாக மீண்டும்  இந்த ஐந்து பேர் மீது அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் பொய்யான புகார் ஒன்றை வைத்து வழக்கு பதிவு செய்து  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அடித்து மனித உரிமை மீறலை செய்து சிறையில் படைத்ததாக ஐந்து பேரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பின்பு மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணை எடுத்துக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 14/09/2021 அன்று மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆய்வாளர் பாலசுந்தரத்துக்கு எதிராக சாட்சி சொல்ல ஐந்து பேரும் வரவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஐந்து பேரும் ஆய்வாளருக்கு எதிராக சாட்சி சொன்னால் ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று பயந்து காவல் ஆய்வாளர் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரியின் கணவர் தங்கராஜ் அணுகி எப்படியாவது அந்த ஐந்து பேரை சாட்சி சொல்ல வர விடாமல் செய்ய வேண்டும் என்று கூறியதன் பேரில் வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ்  13 /09/2021 அன்று இரவு 10:30 மணிக்கு பத்துக்கு மேற்பட்ட அடியாட் களுடன் சென்று ஐந்து பேர் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை தாக்கி உள்ளனர். இது சம்பந்தமாக அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மீது உடனே ஐந்து பேரும் மாநில மனித உரிமை ஆணையத்தில் மீண்டும புகார் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் நடந்து கொண்டது மனித உரிமை மீறல் தான் என்று மாநில மனித உரிமை ஆணையம்  14/10/2021 அன்று உத்தரவிட்டு  11/11/2021 க்குள் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் ராயப்பக்குமார் மூன்று பேரும் 11/11/2021 க்குள் ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  இவர்கள் மூன்று பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது . (தற்போது அன்னவாசல் காவல் ஆய்வாளராக இருந்த பாலசுந்தரம் மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.)

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய புகார் மனு

ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது போல் இழப்பீடு தொகை 5 லட்சம் கிடைக்கவில்லை என்றும் எங்கள் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதாகவும் தற்போது எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்றும் ஆகவே தமிழக முதல்வர் அவர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button