கனிம வளங்கள்

சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தும் அதிமுக பிரமுகர் பிடியில் சிக்கி இருக்கும் கனிம வளத் துறை வருவாய் துறை மற்றும்  அதிகாரிகளை மீட்டெடுப்பார
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் !? சாட்டையை சுழற்றுவார்களால் லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள்!

தமிழ்நாடு முழுவதும் 2,000கல் குவாரிகள், 3,500 கிரஷர்யூனிட்கள் உள்ளன.மத்திய அரசு அண்மையில் சிலபுதிய விதிமுறைகளை வகுத்துஅறிவித்தது. தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை என்றும் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளை உச்சநீதிமன்ற ஆணைபடியும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படியும் 1959 முதல் 03.11.2021-க்கு முன்பு வரை, காப்புக்காடுகளின் எல்லைகளிலிருந்து 60 மீ. சுற்றளவிற்குள் எந்தவித குவாரிப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன், காப்புக்காடுகளின் அருகிலுள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு வருவதாகவோ கடந்த சில மாதங்களுக்கு முன்ப கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் பேணிக்காத்து சேதாரம்இல்லாமல் பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தலையாய கடமையாகும். இதில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு அதிக அளவில் உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து மற்றும் களஆய்வு சென்று கனிமவளங்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.ஆனால் திருப்பூர் மாவட்டம் பல்லடம்:திருப்பூர் மாவட்ட எல்லையோர கிராமங்களில், கனிமவளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.கனிம வளக்கொள்ளை மாவட்ட எல்லைகளில் உள்ளகிராம பகுதிகளில் அதிக அளவில் நடக்கிறது. கிராம மக்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், யாரும் கேள்வி எழுப்புவதில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் கனிமவளம் திருடப்படுகிறது.இதில் முக்கியமாக சொந்த பூமியாக இருந்தாலும், மூன்று அடிக்கு மேல் மண் வெட்டி எடுக்க அனுமதி பெற வேண்டும். தனியார் இடமானாலும் ஓடை கற்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது.நிலத்தை சமன்படுத்த கற்களை அகற்றுவதானாலும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். கனிம வள பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை, பயன்படுத்திக்கொண்டு திருப்பூர் மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரசர்கள், கிராவல் மண் எடுக்கும் நிலங்கள், செம்மண் வெட்டி எடுக்கும் இடங்கள் போன்றவை பெரும்பாலானவை அனுமதியின்றி இயங்கி வருகிறது. உள்ளூர் தேவைக்கு என்றாலும், கனிமங்களை வெட்டி எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதியின்றி கனிம வளங்களை கொள்ளையடிக்கும் செயல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். மாவட்டத்திலே இதுதான் மிகப்பெரிய வட்டம் ஆகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தாராபுரம் நகரம் உள்ளது. தாராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் பகுதிகளில் புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன.

இந்த வட்டத்தின் கீழ் 7 உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]
இவ்வட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.


தாராபுரம் வட்டம் கோயம்புத்தூர் , திண்டுக்கல் , கரூர் என்று மூன்று மாவட்டங்களுடன் எல்லையாக உள்ளது.குண்டடம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குண்டடத்தில் இயங்குகிறது.குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில்
ஆரத்தொழுவு
பெல்லம்பட்டி
எல்லப்பாளையம்புதூர்
கெத்தல்ரேவ்
ஜோதியம்பட்டி
கண்ணன்கோயில்
கொக்கம்பாளையம்
கொழுமங்குழி
குருக்கம்பாளையம் [3]மருத்தூர்
மொலராப்பட்டி
முத்தியம்பட்டி
நந்தவனம்பாளையம்
நவநாரி
பெரியகுமாரபாளையம்
பெருமாள்புரம்
புங்கந்துறை
சடையபாளையம்
சங்கரானந்தம்பாளையம்
செங்கோடம்பாளையம்
சிறுகிணறு [4]சூரியநல்லூர்
வடசின்னாரிபாளையம்
வேலாயுதம்பாளையம் 24 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன.

குண்டடம் ஜோத்தியம் பட்டியில்  அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகரின் கல்குவாரியில் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக   பல ஆயிரம் கோடி   ரூபாய் அளவுக்கு கனிம வளம் வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச் சாட்டுகின்றனர்.கேரளாவுக்கு கனிம வளங்கள் லாரி, லாரியாக கடத்தப்படுகின்றன. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லோடுகளில் கனிம வள பொருட்கள் கடத்தப்படுகின்றன. எவ்வித அனுமதியும் இன்றி, ஏதோ ஒரு பெயரில் ‘டிரிப் சீட்’ போட்டு லாரிகளில் கேரளாவுக்கு பறக்கிறது. இப்படி கடத்தப்படும் கனிமவள பொருட்களை தடுக்க, மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை, புவியியல் துறை, வருவாய் துறை மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கடத்தல் ஜரூராக தொடர்கிறது.
சட்டவிரோத கனிமவள கடத்தலுக்கு தாராபுரம் கோட்டாட்சியர் உறுதுணையாக இருப்பதாகவும் இவரின் அலுவலக உதவியாளர் மணிபால் என்பவர்தான் மீடியேட்டராக செயல்பட்டு சமாச்சாரங்களை வாங்கிக் கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் வருடத்திற்கு பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டவிரோத கனிம வளம் கடத்தலுக்கு தாராபுரம் வட்டாட்சியர் தனக்கு வரவேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டு கொள்வதில்லை எனவும் அதேபோல் துணை வட்டாட்சியருக்கும் மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டி வருவதாகவும் அதேபோல் வருவாய்த் துறையில்  இருக்கும் குண்டடம் வருவாய் ஆய்வாளர் குண்டடம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்  மாதம் குறைந்தது 5 லட்சம் ரூபாய் வரை நல்லா கட்டி வருவதாகவும்  இதனால் கனிம வள கொள்ளையை வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தலில் ஈடுபட்டு வரும் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகியின்  நிறுவனத்துடன் கைகோர்த்துக்
கொண்டு கனிம வளம் கொள்ளைக்கு   குண்டடம் வருவாய் ஆய்வாளரும் குண்டடம் ஜோதியம்பட்டி  கிராம நிர்வாக அலுவலர்களும். பாதுகாப்பாக இருந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல் திருப்பூர் வரை எந்த ஆவணமின்றி லாரிகளில் கிராவல் மண் பாதுகாப்பாக செல்ல
திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் சிவசத்தி தான் முழு ஆதரவு கரம் நீட்டி வருகிறாராம்.
கனிம வளம் கடத்திச் செல்லும் நனரக வாகனங்களை  யார் பிடித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொலைபேசி எண்ணுக்கு உடனே கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் Ri சிவசக்தி பேசி கவனிக்க வேண்டியதை கவனித்து உடனே அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எது எப்படியோ ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என பழமொழியில் தற்போது திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பொருந்தியுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
ஏனென்றால் திமுக அதிமுக இரண்டு கட்சி ஆட்சிகளில் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் திருப்பூர் மாவட்ட  நிர்வாக உயர்
அதிகாரிகள் துணையோடு தங்களது சித்து விளையாட்டை நடத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
தற்போது ஜோதியம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்களை முறைகேடாக வெட்டி எடுத்து  கனரக லாரிகளில் கடத்தி கொண்டு செல்லப்படுவதை சம்பந்தப்பட்ட கனிமவளத்துறை மாவட்ட நிர்வாக காவல்துறை உயர் அதிகாரிகள் பெற்ற லஞ்சத்திற்காக கண்டும் காணாமல் இருந்து வருபவர்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால்
லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் சாட்டையை சுழற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
குண்டடம் வருவாய் ஆய்வாளர் மட்டும்
ரூபாய் 50,000 ஜே சி எஸ் இடம் பெற்றுள்ளார் அதனால்தான் எந்த நேரமும் சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி எடுத்து கனரக வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர். கனிம வள கொள்ளையால் இயற்கை மாற்றம் அடைந்து வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளம், வருவாய் மற்றும் காவல்துறையினர் கடத்தலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுடன் உடந்தையாகவும் உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இரவு பகலாக கனிமவள கொள்ளை தங்கு தடையின்றி முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில்அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் தாராபுரம் பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து கனிமவள கொள்ளையை தடுத்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்ற அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். என சமூக ஆர்வலர்கள் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கனிமவளத் துறை ,வருவாய்த்துறை காவல்துறை , காவல்துறை என அனைத்து துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள்
சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தும் நிறுவனத்திடம் மாதம் எவ்வளவு கையூட்டாக பெற்று வருகிறார்கள் என அடுத்த இதில் வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button