Uncategorizedமாவட்டச் செய்திகள்

கால்நடை மருத்துவ கல்லூரிக்கு நில பரிவர்த்தனை என்ற  பெயரில் தேனி மாவட்ட வருவாய் துறையின் சீர் கேட்டால்!! பெண் மாற்றுத் திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!

நிலப்பரிவர்த்தனை என்ற பெயரில் விவசாயிகளிடம் நிலத்தை பெற்றுக் கொண்டு முறையாக சப் டிவிஷன் செய்து தராமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம். பெண் மாற்றுத் திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!



கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம் கட்டி கட்ட கடந்த அதிமுக ஆட்சியில் 110 க்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான இடத்தை தேனி வீரபாண்டிஅருகே  தப்புக்குண்டு ஊராட்சியில்  253.64 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் பெரும்பாலும் அரசு மெய்க்கால் புறம்போக்கு நிலமாகும். மீதமுள்ள விவசாயம் செய்து வந்த புஞ்சை பட்டா நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் நில பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

அரசுக்கு வழங்கிய பட்டா நிலங்களின் உரிமையாளர்களுக்கு மானாவாரி  இடங்கள் வழங்கி அந்த இடத்திற்கான பட்டா வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் நிலம் வழங்கும் உரிமையாளர்களிடம் முழு சம்மதத்துடன் எங்கள் நிலத்தை வழங்குவதாகவும் 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கியுள்ளார்கள் தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்.

பெண் மாற்றுத் திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!

ஜெயந்தி பெண் மாற்றுத் திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!

அது மட்டும் இல்லாமல் நிலம் வழங்கியவர்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை கொடுப்பதாகவும் வாய்மொழி உத்தரவாக அப்போது உள்ள தேனி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நிலம் கையகப்படுத்தும் போது அருகில் உள்ள நிலங்களில் உள்ள பல மரங்கள் மற்றும் விவசாய பயிர்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு வழங்குவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நிலத்தை கையகப்படுத்தும் வரை நில உரிமையாளரிடம் வாய்மொழி உத்தரவு மூலம் ஆசை வார்த்தைகளை  கூறி நம்ப வைத்துள்ளனர். இதை நம்பி பல பாமர ஏழை விவசாய நில உரிமையாளர்கள் இவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி மாற்றுத்திறனாளி ஜெயந்தியின் கணவர் 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவர் ஆராய்ச்சி மையம் நுழைவு முகப்பில் இருந்த பெண் மாற்றுத்திறனாளியான ஜெயந்தி என்பவரது சர்வே எண் 47/2A2  76.5 சென்ட் புஞ்சை நிலத்தை கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக 52/1 மானாவாரி நிலத்திற்கு பட்டா வழங்கியுள்ளனர் .(G.O.No.456 )அரசுக்கு வழங்கிய புஞ்சை நிலத்திற்கும் மற்றும் அரசு வழங்கிய கிராம நத்தம் மானாவாரி நிலத்திற்கு சப் டிவிஷன் செய்யாமலும் நான்கு மால் அளந்து கொடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும்ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் கட்டித் தராததால்  கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் கட்டிடப் பணி நடைபெறும் போது 150 க்கும் மேற்பட்ட கொய்யா மரங்களில் இருந்த கொய்யா பழங்களை கட்டிடப் பணி தொழிலாளர்கள் பறித்துக் கொண்டதும் இல்லாமல் அந்த மரங்களை  சேதப்படுத்தி உள்ளதாகவும் . அதுமட்டுமில்லாமல் அங்கு பயன்படுத்தும் கழிவு குப்பைகள் கழிவு நீர்  மதுபான பாட்டில்கள் அதுமட்டுமில்லாமல் கட்டிடப் பணியில் பயன்படுத்திய கழிவுகள் அனைத்தையும் எங்கள் நிலத்தில் இருப்பதால் அந்த நிலத்தை எதற்கும் பயன்படாத நிலையில் தற்போது உள்ளது. அதுமட்டுமில்லாமல் எங்கள் நிலத்தில் உள்ள பாசன  15 மீட்டர் தொலைவில் கால்நடை மருத்துவ மைய கட்டிடத்தின் கழிவுநீர் தொட்டி கட்டி உள்ளதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிலப்பரிவர்த்தனை மூலம் பட்டா வழங்கிய நிலத்தின் நடுவே மின்சாரக் கம்பங்கள் இருப்பதாகவும் இதனால்  எந்த பயனும் இல்லை என்றும் மின்கம்பங்களை அகற்ற பலமுறை மாவட்ட ஆட்சியர் தாசில்தார் தமிழக முதல்வர் அனைவருக்கும் கோரிக்கை அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல தேனி மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகமும் கோரிக்கை மனுவின் மீது செவி சாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2020 ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி தேனி அருகே ரூ.266 கோடியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் முன்னாள்  துணை முதலமைச்சரராக இருந்த  ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

பணிகள் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்த நிலையில் இன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில்  புதிய கட்டிடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.
தேனி வீரபாண்டிஅருகே  தப்புக்குண்டு ஊராட்சியில்  253.64 ஏக்கர் பரப்பளவில் 265 கோடி மதிப்பில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாக கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இதில் நிர்வாக கட்டிடம், பல்வேறு துறைகள் அடங்கிய கல்வியியல் கூடங்கள் (8 எண்ணிக்கை), கால்நடை பண்ணை வளாகம், கால்நடை சிகிச்சை வளாகம், மாணவ-மாணவியர் விடுதி, முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் குடியிருப்புகள் போன்றவை அடங்கும்.


இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் . வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர். க.ந.செல்வகுமார், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் த.A. கார்த்திக் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா , தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி. என். ரிச்சர்டு ஜெகதீசன், அரசு உயர் அலுவலர்கள், தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி
_கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,, தேனி
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தேனி
புவியியல் இருப்பிடம், விவசாய வளம் மற்றும் கால்நடை வளங்கள் ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தமிழ்நாடு மாநிலத்தின் சந்தைப்படுத்தல் வழிகளுக்கும் சாதகமாக இருப்பதால், தேனியில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அக்டோபர், 2020 இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது.

சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஏழு உறுப்புக் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button