காவல் செய்திகள்

திருமணம் செய்வதாக உடலுறவு வைத்து கொண்ட பெண்ணை தவறாக சித்தரித்து மிரட்டுவதாக புகார்! தேனி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேர்மையான விசாரணை நடத்துவார்களா!?

கடந்த வருடம் 2022 ஜூன் 2ஆம் தேதி தேனியில் உள்ள பிரபல ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு கொண்டு தற்போது ஏமாற்றியதாக புகார் கூறி பெண் கடையின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத் தக்கது!



தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடையான கணபதி சில்க்ஸ். இந்த வணிக வளாகத்தில் உள்ள கடையில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்த பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டி யைச் சேர்ந்த சின்னகருப்பன் என்பவரது மகள் மேனகா (29) வுக்கும் கணபதி சில்க் கடை உரிமையாளரான முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேனகாவைத் திருமணம் செய்து கொள்வதாக முருகன் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மேனகாவும், முருகனும் கடைக்குள் உள்ள ஒரு அறையிலும், முருகன் தங்கியுள்ள பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் பல முறை உல்லாசமாக இருந்து வந்ததாகவும் அந்த நிலையில் 2022 மார்ச் 6ஆம் கணபதி சில்க் முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த கருணாஸ் ஹோட்டல் பொன் ஆனந்தன் பிரபல தொழிலதிபரின் மகளுமான பிரசன்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் 8/3/2022 அன்று மேனகாவுக்கும் கணபதி சில்க் உரிமையாளர் முருகனுக்கும் முறைப்படி திருமணம் நடந்ததாகவும்

ஆனால் திருமணம் செய்து கொண்டு முருகன் ஏமாற்றி விட்டதாக கடந்த மார்ச் 14-ம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அதன் பின்னர் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற அலுவலர்கள் ஆவணங்களை பரிசீலனை செய்ததன் அடிப்படையில் பெரியகுளம் நீதிமன்ற நீதிமன்றத்திற்கு 28/09/2022 18, 19 ,20, 21 இன் கீழ் வழக்கு பதியவும் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்ததன் பெயரில் முருகன் மீது கற்பழிப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த முருகன் தலைமறைவாக இருந்த நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட முருகன் ஜாமீனில் விடுக்கப்பட்டார். அதன் பின்பு கற்பழிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க முருகன் பெற்றோர்கள் தரப்பிலிருந்து மகளிர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். Cri po (MO)no.15448/2022 அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணம் ஆகும் நிலையில் இருக்கும் இவர் மீது உள்ள வழக்கு மனுவை அனுமதித்தால் பல பெண்களை பாழ்படுத்தி விடுவார் என்று குறிப்பிட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமில்லாமல் மகளிர் நீதி மன்றம் வழக்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேனியில் உள்ள கணபதி சில்க்ஸில் அந்த பெண் அழகு சாதன பொருட்கள் கடை நடத்தி வந்த நிலையில் கடையின் உரிமையாளர்கள் அந்த பெண்ணின் கடையை அடித்து நொறுக்கி 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடைக்குள்ளேயே தனக்கு நியாயம் கேட்டு கையில் பதாகையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 20/02/2022 ஆம் தேதி தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த மேனகா பிரமலைக்கள்ளர் சங்க கூட்டமைப்பு சார்பாக எம். சி எ.அன்பழகன் அவர்களுடன் சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேனகாவை அழைத்து வந்து புகார் ஒன்று கொடுத்துள்ளார்

.Watch “தேனி கண்பதி சில்க் உரிமையாளர் மகன் பெண்ணிடம் உல்லாசம்!” on YouTube https://reportervisionnews.com/watch-தேனி-கண்பதி-சில்க்-உரிமை/

பிரமலைக்கள்ளர் சங்க மாநில நிர்வாகி MCA. சம்பத் மேனகா


அந்தப் புகாரில் கூறப்பட்டது. 21/12/2022 அன்று தொழிலதிபர் முகமது ரபீக் என்பவர் 50000 ரூபாய் சேலைக்காக வங்கியில் பணம் அனுப்பியதாகவும் சேலை வேண்டாம் என்றதால் சத்தியா என்பவருக்கு 20 ஆயிரம் பணத்தை திருப்பி அனுப்பி விட்டுள்ளனர்.
ஆனால் ரபிக் முகமது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் 30/01/2022 அன்று கொடுத்துள்ள புகார் ஜோடிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.
அந்தப் புகாரில் கூறப்பட்டது.
தொழிலதிபர் ரபிக் முகமது மனைவி இறந்து விட்டதாகவும் அதனால் ரபிக் முகமதுக்கு உதவியாக மேனகா இருப்பார் என்றும் இரண்டு பெண்கள் ரபிக் முகமது இடம் தொலைபேசியில் பேசி அறிமுகப்படுத்தியதாகவும் அதன் பின்பு மேனகா ரபிக் முகமதுவை மேனகா தொலைபேசியில் தொடர்ந்து பேசி திருமணம் செய்துக் கொள்கிறேன் என்ற கூறியதால் 21/12/2022 அன்று வங்கிக் கணக்கில் 50000 பணம் அனுப்பியதாகவும் அதன் பின்பு 10 லட்சம் கேட்டதால் அறிமுகப் படுத்திய இரண்டு பெண்களை வைத்து கொடுத்ததாகவும் அதன் பின் 26/22/2022 ஆம் தேதி முதல் தலைமறைவாகி விட்டதாக புகார் கொடுத்து விட்டு பத்திரிகை மற்றும் தொலைகாட்சி நிருபர்களை அழைத்து பேட்டி கொடுத்ததன் பெயரில் அனைத்து பத்திரிகை மட்டும் தொலைக்காட்சிகளில் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் நடந்தது என்னவென்றால் இரண்டு பெண்கள் ரபிக் முகமது உடன் சேலை வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி பேசி வந்ததாகவும் சேலை விற்பனை செய்வதற்கு மட்டுமே பணம் கொடுத்துவிட்டு
வேறு வழக்கு சம்பந்தமாக இந்தப் பெண்ணை போலி ஆவணங்களை வைத்து மிரட்டி வந்ததாகவும் அதன் பின்னர் மேனகா பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் 26/12/2022 புகார் கொடுத்ததாகவும் அதன் பின்னர் மேனகா கொடுத்த அந்தப் புகாரை வாபஸ் வாங்க சொல்லி ரபிக் முகமது தன்னுடைய வழக்கறிஞரை வைத்து மிரட்டியதாகவும் அதன் பின்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 01/01/2023 அன்று மிரட்டி உள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் அச்சுறுத்தல் இருந்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் 23/01/2023 அன்று பாதிக்கப்பட்ட மேனகா தமிழக முதல்வர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாகவும் ஆணாதிக்கம் மிக்க இந்த சமூகத்தில்
கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து மஅடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தி வரும் நிலையில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் போராடிவரும் மேனகாவை பண பலத்தால் ஒரு சில ஆணாதிக்க நபர்களிடமிருந்து பாதுகாக்க பாதுகாப்பு வழங்கிடவும் தமிழ் மாநில துணைமரை கள்ளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட என் மேனகாவும் புகார் மனு வழங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள மேனகாவின் புகார் ஒரு திரைப்படத்தில் வருவது போல நடந்து கொண்டிருப்பது தான் உண்மை. ஒரு குற்றத்தை மறைக்க பல குற்றத்தை செய்வது போல கணபதி சில்க் உரிமையாளர் முருகன் செய்த குற்றத்திற்காக தற்போது தன்னிடமுள்ள பண பலத்தால் வேறு நபர்களை வைத்து மேனகா தவறான ஒரு பெண் என்று சித்தரித்து திசை திருப்ப முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எது எப்படியோ தேனி கணபதி சில்க் முருகனும் மேனகாவும் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் கணபதி சில்க் மேலாளர் வினோத் கணபதி சில்க் உரிமையாளர் முருகனின் தந்தை பாலசுப்பிரமணியத்திடம் பேசிய ஆடியோ ஆதாரம் இவற்றையெல்லாம் வைத்து நேர்மையான முறையில் காவல்துறை விசாரணை செய்து தவறு செய்த யாராக இருந்தாலும் அவர்களை சட்டரீதியாக தண்டனை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆதங்கம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button