குமாரபாளையம் பிரபல எக்ஸெல் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் கல்லூரி விடுதியில் மரணம்!
கொலையா!? தற்கொலையா!? தொடரும் மரணங்கள்
நடப்பது என்ன!?

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
சேலம் சாலையில் இயங்கி வரும்

எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடிப் பகுதியைச் சேர்ந்த கோகுல், வயது 19.
இந்த மாணவன் 05/10/25 ஞாயிறு அன்று இரவு, விடுதியில் உணவு சாப்பிட்டுவிட்டு நள்ளிரவு வரை நண்பர்களுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றவுடன்
அவருடன் சக மாணவர்களும் தூங்கச் சென்று விட்டனர்.
மறுநாள் காலை ஏழு மணி அளவில் வழக்கம் போல் கோகுலுடன் தங்கி இருந்த ஹரி என்ற மாணவர் இரண்டு பேரும் கழிப்பறைக்கு
சென்றுள்ளார் .
அதன் பின்பு நீண்ட நேரம் ஆகியும் கழிப்பறைக்குச் சென்ற கோகுல் வரவில்லை.
அதன் பின்னர் ஹரி கோகுல் சென்ற கழிப்பறை தள்ளிப் பார்த்துள்ளார் உள்பக்கம் கதவில் தாழ்ப்பால் போட்டிருந்ததால் திறக்க முடியவில்லை.
அதன் பின்பு கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது கோகுல் அணிந்திருந்த டவுசர் நாடாவினால், கழிப்பறையில் உள்ள கம்பி ஒன்றில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை பார்த்த சக மாணவன் ஹரி அதிர்ச்சி அடைந்து
அதன் பின்னர் கல்லூரி வார்டன் இளவரசனுக்கு தகவல் கொடுத்த பின்பு கல்லூரி வார்டன் இளவரசன் உடனடியாக

குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் .
அதன் பின்னர் குமாரபாளையம் காவல் நிலைய காவலர்கள் எக்ஸெல் பொறியியல் கல்லூரிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும். மாணவன் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் சம்பந்தமாக கடம்பக்குடியில் உள்ள மாணவனின் உறவினர்களிடம் விசாரணை செய்த போது தூக்கிட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு மாணவன் கோழை இல்லை என்றும்.
தைரியமான மாணவன் என்றும் மாணவன் அணிந்திருந்த டவுசர் நாடாவில் அதுவும் கழிப்பறையில் உள்ள கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மாணவனின் மரணத்தில் சந்தேகம் மற்றும் மர்மம் இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் உண்மையான மரணத்தை மறைக்க முயற்சி செய்வதாகவும்
கல்லூரி வளாகம் மற்றும் கல்லூரியின் விடுதி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையிடம் கொடுக்காமல் இருப்பதால்
கல்லூரி நிர்வாகத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் நாங்கள் காவல்துறையில் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ கல்லூரியில் அடிக்கடி நடக்கும் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வராமல் கல்லூரி நிர்வாகங்கள்
பண பலத்தாலும் அரசியல் பலத்தாலும் மறைத்து வருவது வேதனைக்குரியது.
ஆகவே தமிழக முதல்வர் கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் எதிர்கால நலன் கருதி
நேர்மையான அதிகாரிகளை நியமித்து கல்லூரி விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களா இல்லை மரணத்திற்காக வேறு ஏதாவது காரணமா என நேர்மையான முறையில் விசாரணை செய்து தற்கொலை மரணம் இல்லை என தெரியவரும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைத்து சமூக ஆர்வலர்களையும் கோரிக்கையாக உள்ளது.