காவல் செய்திகள்

கொலை வெறி தாக்குதல் நடத்தி பணம் பறிக்கும்  கந்துவட்டி  மாபியா  கும்பல்!
உடந்தையாக செயல்படும் புதுக்கோட்டை  நகர் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

புதுக்கோட்டையில் மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கலாச்சாரம்!தமிழ்நாட்டில், அதிக வட்டி வசூலிப்பதைத் தடுக்க 2003-ல் தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2025-ல் புதிய சட்டமும் வந்துள்ளது, இது அதிக வட்டி வசூலித்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும். 
கந்துவட்டி தொழில்  சட்டவிரோதமான செயலாகும்.
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால்
கந்துவட்டி வசூலிப்பவர்களைப் பற்றி புகார் அளிக்க,  காவல் நிலையத்தை அணுகலாம். என்ற சட்ட விதிகள் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல்
கடனை கொடுத்தவர்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சட்டப்பேரவையில்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா  உடனே நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது .
இந்த புதிய சட்டத்தில் கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வன்முறையை பயன்படுத்துவது, அவமதிப்பது, மிரட்டுவது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்வது, அந்த சொத்துகளை பறித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபட கூடாது.
அதேபோல, கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளை பயன்படுத்துவது, அரசு திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-வது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்படும்.வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால்  பி என் எஸ் 108 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்
அந்த சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம்
காவல்துறையினர் கடைபிடிக்கிறார்களா என்றால் அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

அது மட்டுமில்லாமல் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டால்,  காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால்  உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.  என்ற நம்பிக்கை தற்போது பொதுமக்களிடம் அறவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பணம் கேட்டு கந்துவட்டி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன்


புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சட்டவிரோத கந்துவட்டி தொழில்  அதிகமாக நடந்து வருவதாகவும்  இதை நம்பி
பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக சட்டவிரோதமாக கந்து வட்டி தொழில்  செய்து வருபவர்களைபற்றி முழுமையாக விசாரித்து தெரிந்து கொள்ளாமல். கந்து வட்டிக்கு பணம் வாங்கி விடுகிறார்கள்.
அதன் பின்னர் பணம் வாங்கியவர்கள் அசல் உடன் சேர்த்து 10 நாட்களில் வட்டி கட்ட வேண்டும்.
அப்படி கட்ட முடியாதவர்களிடம்  
இருந்து கடனை வசூலிக்க, வட்டிக்கு மோல் வட்டி போட்டு  ஸ்பீடு வட்டி ராக்கெட் வட்டி என முறையற்ற வழிகளை கடன் கொடுத்தவர்கள் பின்பற்றுவதால் அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளை தற்கொலை செய்துகொள்ள தூண்டுதலாக அமைந்து, அதன்மூலம் பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படைய செய்து விடுகிறது.

அதன் பின்னர் பணம் வாங்கியவர்கள் அசல் உடன் சேர்த்து 10 நாட்களில் வட்டி கட்ட வேண்டும்.
அப்படி கட்ட முடியாதவர்களிடம்   வட்டிக்கு மோல் வட்டி போட்டு  ஸ்பீடு வட்டி ராக்கெட் வட்டி என நாட்டில் இல்லாத சட்ட விரோதமாக கொடுத்த பணத்தைவிட பல மடங்கு பணம் வசூல் செய்வதால் பணம் வாங்கியவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
சட்டவிரோதமாக கந்துவட்டி தொழில் செய்பவர்கள்
மீது பாதிக்கப்பட்ட நபர்கள் புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால்  வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் சட்டவிரோதமாக கந்துவட்டி தொழில்  செய்பவர்களுக்கு சாதகமாக காவல் நிலையத்தில்  விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை நகர் துணை காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பி அப்துல் ரகுமான் கட்டுபாட்டில் உள்ள கணேஷ் நகர் காவல் நிலையம். மற்றும் திருக்கோகரணம் காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் ,உதவி காவல் ஆய்வாளர்கள் , பிரதீப். தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் சட்டவிரோதமாக கந்துவட்டி தொழில் செய்து வரும் கும்பல்களிடம் தொடர்பு   வைத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கந்துவட்டி கும்பல்களிடம் பணம் வாங்கி அதிக வட்டி கொடுத்து பாதிக்கப்பட்ட சாமானிய ஏழை எளிய கூலித் தொழிலாளிகள்  புதுக்கோட்டை நகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் வந்து புகார் கொடுத்தால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சட்ட விரோத கந்துவட்டி தொழில் செய்யும் கும்பல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அதுமட்டுமில்லாமல்
காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில்  கட்டப்பஞ்சாயத்து செய்து சட்டவிரோதமாக கந்துவட்டி தொழில் செய்பவர்களுக்கு சாதகமாக பணம் வசூல் செய்து கொடுக்கும் தொழிலை காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் செய்து வருவதாகவும் இதற்கு காவல் நிலையங்களுக்கு  கந்துவட்டி தொழில் செய்யும் கும்பல் மாதமாதம் பெரிய தொகையை கப்பம் கட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக  கந்து வட்டி தொழில் செய்யும் கும்பல்களின் அட்டகாசம்  நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதாகவும்
பணம் கொடுத்தவர்களிடம் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும் கொலை மிரட்டல் விடுவதும் அதைவிட ஒரு படி மேல் அடியாட்களை அழைத்துச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சாமானிய ஏழை எளிய கூலி தொழிலாளிகள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

கடன் வாங்கிய ரவிச்சந்திரன்

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர்

கந்துவட்டி தொழில் செய்து வரும் ராமலிங்க ஐயர்.

புதுக்கோட்டை வடக்கு மூன்றாவது வீதியில் சட்டவிரோத கந்துவட்டி தொழில் செய்யும் ராமலிங்க  ஐயர் என்பவரிடம் 25,000 ரூபாய்  கடன் பெற்றுள்ளார். அதற்கு  1500 ரூபாய் வட்டி என  மாதம் மாதம் கொடுத்து வந்ததாகவும் .கடந்த சில மாதங்களாக தொழில் இல்லாமல் வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . ராமலிங்க அய்யர் ரவிச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்
அது மட்டும் இல்லாமல் தொலைபேசியில் ஆபாசமாகவும் பேசி வந்த நிலையில் 31/08/25 அன்று இரவு   8.30 மணி அளவில் புதுக்கோட்டை TVS கார்னர் அருகே உள்ள பேக்கரியில் ரவிச்சந்திரன்  உட்கார்ந்திருந்த போது நேரில் வந்த ராமலிங்க ஐயர்  ரவிச்சந்திரன் சட்டியை பிடித்து பணம் கேட்டு தகாத வார்த்தைகள் திட்டி உள்ளார். உடனே  காவல் நிலையத்திற்கு செல்வோம் அங்கு வைத்து பேசிக்கொள்வோம் என

புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு ராமலிங்க ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் சென்றுள்ளனர். ஆனால் நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் உதவி காவல் ஆய்வாளர் யாருமே இல்லை என்றும் உடனே ராமலிங்க ஐய்யர்  அவதார் நகைக்கடை உரிமையாளர் முருகேசனுக்கு  போன் செய்த உடன் காவல் நிலையத்திற்கு வந்த முருகேசன் கடைக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று அழைத்துச் சென்றுள்ளார். முருகேசன் கடையில் பேசிக் கொண்டிருந்தபோது ராமலிங்க ஐயர் தொலைபேசியில் கூலிப்படை கும்பலுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். உடனே கூலிப்படை கும்பல்கள் ராமலிங்க ஐயர் சொன்ன  முருகேசன். நகைக்கடைக்கு வந்தவுடன் ராமலிங்க ஐயர் ரவிச்சந்திரனை கீழே தள்ளிவிட்டு உள்ளார். உடனே கூலிப்படை கும்பல்கள் கீழே விழுந்த ரவிச்சந்திரன் கழுத்து நெஞ்சு பகுதிகளில் மிதித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கூலிப்படை கும்பல்களுடன் வந்த
அரங் குளவன்

கூலிப்படை கும்பல்களுடன் மது போதையில் வந்த
அரங்குளவன் என்பவர் ரவிச்சந்திரனின் கழுத்தில்  சூரி கத்தியை வைத்து  பணத்தைக் கொடுக்கவில்லை என்றால்  கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் ரவிச்சந்திரன் சட்டைப்பையில் இருந்த  ATM கார்டை எடுத்துக்கொண்டு பின் நம்பர் கேட்டு நான்கு பேர் கொண்ட கூலிப்படை கும்பல் தாக்கியதில் நெஞ்சு வழி தாங்க முடியாமல்  ரவிச்சந்திரன் மயங்கி விழுந்தவுடன்  ராமலிங்க அய்யர் மற்றும் கூலிப்படை கும்பல்  அப்படியே விட்டு விட்டு ஹீரோ ஹோண்டா இரு சாகர் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.அதன் பின்னர் நெஞ்சு வலியுடன் இருந்த ரவிச்சந்திரன்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று   நெஞ்சு வலியுடன்

புதுக்கோட்டை அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் புதுக்கோட்டை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  கூலிப்படை கும்பல் மீது எந்த ஒரு வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆக்கி வருவதாகவும் .

புதுக்கோட்டை நகர் துணை காவல் கண்காணிப்பாளர்

புதுக்கோட்டை நகர் துணை காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கொலை வெறி தாக்குதல் நடத்திய கந்துவட்டி தொழில் செய்து வரும் ராமலிங்க அய்யர் மற்றும் கூலிப்படை கும்பல்கள் மற்றும் கந்து வட்டி தொழில் செய்பவர்களுக்கு உடனடியாக செயல்படும் காவலர்கள்   அனைவரும் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து கோரிக்கை விடுத்துள்ளார்.


எது எப்படியோ தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கந்து வட்டி கும்பல்களிடம் வாங்கிய கடனுக்காக வட்டி மேல் வட்டி கட்டி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சாமானிய ஏழை எளிய கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட விதிகளின்படி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை  எடுப்பார்களா!?
பொறுத்திருந்து பார்ப்போம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் செயல்பாட்டை!

Related Articles

Back to top button