விசாரணை என்ற பெயரில் அழைத்து செல் போனை பறித்துக் கொண்டு புகாரை
வாபஸ் வாங்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக திருமயம் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

கடந்த 25/09/25. வியாழன் அன்று செய்தி சேகரிக்க திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரிப்போர்ட்டர் விஷன் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் பழனியப்பன் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத ஒருவர் வந்து திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் உங்களை கூப்பிடுகிறார் என அழைத்துள்ளார் அதை நம்பி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் அலுவலகத்திற்கு வெளியே வந்து நிருபர் பழனியப்பனை பார்த்து நீதான் செய்தி போட்டாயா நான் யார் தெரியுமா என
எழுத முடியாத தகாத வார்த்தைகளால் பேசி சட்டையைப் பிடித்து முதுகில் குத்தி கன்னத்தில் அறைந்து தலையில் அடித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அப்போது சார் பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் இருந்தவர்கள் கூட்டமாக வந்து நிருபறை தாக்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை அவரது அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்பு நிருபர் பழனியப்பன் அருகில் இருந்த

திருமயம் காவல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோர் இருவரும் இல்லாததால்

காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலரிடம் புகாரை கொடுத்துவிட்டு அதன் பின்னர் வந்த

திருமயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் CSR வழங்கியுள்ளார்.

CSR no. 448/2025 25/09/25 நேரம். 5.30.pm)
அதன் பின்னர் விசாரணைக்கு அழைக்கும் போது வரும்படி கூறியுள்ளார்.
அதேபோல் 26/07/25 அன்று 10 மணி அளவில் சார்பு ஆய்வாளர் சரவணன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்ததன் பேரில் காவல் நிலையத்திற்கு நிருபர் பழனியப்பன் சென்றுள்ளார்.
காவல் நிலையத்துக்கு சென்றவுடன் நிருபர் பழனியப்பன் வைத்திருந்த செல்போனை
திருமயம் சார்பு ஆய்வாளர் சரவணன் பறித்துக் கொண்டு சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
அதன் பின்னர் நிருபர் பழனியப்பனை இருக்கையில் உட்காரக் கூட வைக்காமல் மதியம் ஒரு மணி வரை நிற்க வைத்துள்ளனர்.
அதன்பின்னர் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்துக்கு திருமயம் காவல் நிலைய சார்பாக சரவணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வர வைத்துள்ளார்.
மதியம் ஒரு மணிக்கு திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அதன் பின்பு விசாரணை என்ற பெயரில் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்தை நாற்காலியில் உட்கார வைத்து விட்டு சார்பு ஆய்வாளர் நிருபர் பழனியப்பனை விசாரணை என்ற பெயரில் புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் உன் மீது பொய் வழக்கு பதிவு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் நிருபர் பழனியப்பன் புகாரை வாபஸ் வாங்க மாட்டேன் என கூறியுள்ளார். பின்பு திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்தை வெளியே அழைத்துச் சென்று அவரிடம் ஒரு பெரிய தொகையை கையூடாக பெற்றுக் கொண்டு செல்லும்படி திருமயம் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் சரவணன் கூறியுள்ளார்.
அதன் பின்னர் மாலை 5.00மணி அளவில் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியுள்ளார். புகாரை வாங்க மறுத்த நிருபர் பழனியப்பன் மீது

பொய் வழக்கு பதிவு செய்து விட்டு
ஒரு எழுதாத பேப்பரில் நிருபர் பழனியப்பன் இடம் திருமயம் காவல் நிலைய சார்பாக சரவணன் கையெழுத்து வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் செல்போனை நிருபர் பழனியப்பன் இடம் கொடுத்து

பொன்னமராவதி டிஎஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் உன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம் .

ஆகையால் வீட்டிற்கு போன் செய்து இரண்டு செட் துணி எடுத்து வரும்படி கூறியுள்ளார் சார்பு ஆய்வாளர் சரவணன்.
அதன் பின்னர் நிருபரின் மனைவி காவல் நிலையத்திற்கு சென்று எதற்கு என் கணவர் மீது பொய் வழக்கு போட்டு உள்ளீர்கள் என கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார் சார்பு ஆய்வாளர் சரவணன்.
அதன் பின்னர் நிருபரை நீதிபதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர் ஆனால் நீதிபதி சிறையில் அடைக்க மறுத்து வெளியில் விட்டுவிட்டார்.
தற்போது திருமயம் சார்பு ஆய்வாளர் சரவணன் மற்றும் திருமயம் சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவராலும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் செய்தி சேகரிக்கச் செல்லும் வழியில் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் திருமயம் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மற்றும் திருமயம் சார்பு ஆய்வாளர் ஆகிய இருவர் தான் காரணம் என்றும் ஆகவே என் மனைவி மற்றும் குழந்தைகள் நலன் கருதி
25/09/25 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வழங்கியுள்ள( CSR no. 448/2025) இன் அடிப்படையில் திருமயம் சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் அதேபோல் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல் போனை பறித்து சுவிட்ச் ஆப் செய்து வைத்து கொண்டு காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைத்து என்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்த திருமயம் சார்பு ஆய்வாளர் சரவணன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் கொடுத்துள்ளார். அதேபோல்

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளருக்கு ஆன்லைனிலும் புகார் கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தமிழக முதல்வர் தனிப்பிரிவு மற்றும் விஜிலென்ஸ் மற்றும் மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிற்கும் ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் சம்பந்தமாக திருமயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போது எடுத்து பேச மறுத்து விட்டார்.
எது எப்படியோ ஒரு பத்திரிக்கையாளருக்கே இந்த கதி என்றால் சாமானிய ஏழை எளிய மக்களை என்ன பாடு படுத்துவார்கள் காவல் நிலையத்தில் என்பதை நாம் சொல்லி தெரிய தேவையில்லை.
இதிலிருந்தே தெரிந்து கற்றுக் கொள்ளலாம்
ஆகவே பத்திரிகை நிருபர் கொடுத்துள்ள புகாரின் மீது நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொண்டு திருமயம் காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர் மீது துணை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை ..!
திருமயம் காவல் நிலைய சார்பாக ஆய்வாளராக இருக்கும் சரவணன் இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணன் மீதுமீது பல குற்றச்சாட்டு புகார்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்துள்ளதாகவும் அடிப்படையில் தான் தற்போது திருமயம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.