சினிமா

சினிமா தொழிலை சீர்குலைக்கும் ஆர் கே செல்வமனி!தயாரிப்பாளர்கள் சங்கம் ஆவேசம்!

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆர்கே செல்வமணி!

பிரச்சினைக்கு காரணம் சிம்புதான் ஆர்கே செல்வமணி! இந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆர்கே செல்வமணி விளக்கம்!

நடிகர் சிம்பு நான்கு தயாரிப்பாளர்களிடம் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுக் கொண்டு தற்போது வரை நடித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் வந்த போது தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர் செல்வமணியை அழைத்து நடிகர் சிம்பு 4 தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளதால் தற்போது சிம்பு நடிக்கும் படத்திற்கு தாங்கள் தொழிலாளர்களை அனுப்பக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர் .

அதன் பின்னர் நடிகர் சிம்பு சார்பில் தென்னிந்திய சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணியிடம் 4 தயாரிப்பாளர்களில் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் லிங்குசாமி அவர்களிடம் பேசி முன்பணமாக பெற்ற ஒரு கோடியை திருப்பி தருவதாகவும் ஆனால் அவர்கள் 10 வருடம் ஆகிவிட்டது அதற்கு வட்டியுடன் கேட்பதாகவும் ஏதாவது வங்கி வட்டி போட்டு கொடுத்து விடுமாறும் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் மற்றொரு தயாரிப்பாளர்சிவசங்கர் 50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் அவருக்கு பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சென்றதாகவும் .தேனாண்டாள் பிச்சர் சார்பாக செல்வகுமார் என்ற தயாரிப்பாளர் 3 கோடி கொடுத்ததாகவும் அதை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் ஏற்கனவே சிம்புவை வைத்து படம் எடுத்த மைக்கேல் ராயப்பன் புகாரை பேசி தீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களை ஐசரி கணேஷ் தயாரிக்கும் திரைப்படம் திருச்செந்தூரில் 5 நாள் சூட்டிங் இருப்பதாகவும் அந்த சூட்டிங்கை முடித்து விட்டு சென்னை வந்தவுடன் இந்த பிரச்சினையெல்லாம் முடித்தவுடன் அடுத்த சூட்டிங் வைத்துக் கொள்கிறேன் என்று ஐசரி கணேஷ் எழுத்துப்பூர்வமாக கொடுத்ததாகவும் ஆர்கே செல்வமணி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ஐசரி கணேஷ் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மற்றும் வேலை இல்லா நேரங்களில் நிறைய உதவி செய்ததாலும் அவருடைய கல்லூரிகளில் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதாகவும் இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஐந்து நாள் ஷூட்டிங் நடத்த தொழிலாளர்களை அனுப்பியதாகவும் ஆர்கே செல்வமணி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார் .

இதற்கு பத்திரிக்கையாளர்கள் இந்த பிரச்சனைக்கு தயாரிப்பாளர் சங்கம் தலைவர் முரளிக்கு பின்பு யார் இந்த பிரச்சினையை தூண்டி விடுகிறார்கள் என்று சந்தேகப்படுகிறார்கள் என்று கேட்டதற்கு அது இருக்கலாம் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி இல்லை என்றால் அந்த இருக்கையில் வேறு ஒருவர் தலைவராக இருந்தால் இந்த பிரச்சினைக்கு நான் எடுக்கும் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்றும் ஆர்கே செல்வமணி ஆவேசமாகப் பேசினார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேலனத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் வெடித்த மோதல்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு தேவையான ஆட்களை தயாரிப்பாளர்களே நியமித்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி இனிமேல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு (ஒன் டூ ஒன் )
முறையில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களின் ஆதரவு இன்றி செயல்படும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டத்தில் முழுமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button