காவல் செய்திகள்

டிஜிபி உத்தரவை கிடப்பில் போட்ட காவல் நிலையங்கள்!??

காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க டிஜேபி யாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் !

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிப்பது இல்லை என்பது தான் உண்மை என்று பல காவல் நிலையங்களில் பணிசெய்யும் காவலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது!

தமிழகத்தில் காவல்துறையில் உயர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன .

கான்ஸ்டபிள் முதல் உதவி ஆய்வாளர் வரை உள்ள சுமார் 13 ஆயிரம் காலி பணி நிரப்பப்படாமல் உள்ளன.

2021 ஜூலை வரை

ஒதுக்கப்பட்ட ஆண் பெண் காலி எண்ணிக்கை

ஐ ஜி 38 27. 5. 32 6

டி ஐ ஜி. 31 12 15 27 4

SP 06 06 0
(ஆயுதப் படை)

கமாண்டன்ட் 10 10 0
(பட்டாலியன்)

ஏடிஎஸ்பி. 166 136 19 155 11

துணை 16 16 0
கமாண்டன்ட்

டிஎஸ்பி 717. 601. 27 628. 89

டிஎஸ்பி
(ஆயுதப்படை). 79. 78 01

உதவி
கமாண்டன்ட் 52 25 03 28 24

இன்ஸ்பெக்டர் 2458 1364 1087 2451 07

இன்ஸ்பெக்டர். 151 140 11 151 00
(பட்டாலியன்)

இன்ஸ்பெக்டர்.317 275 16 291 26
(ஆயுதப்படை)

எஸ் ஐ. 8792/ 5432/ 993/6425/2367

எஸ் ஐ
(ஆயுதப்படை) 1240 785 37. 822. 418

எஸ் ஐ
(பட்டாளியான்). 477. 279. 119. 398. 79

கான்ஸ்டபிள்.
ஒதுக்கப்பட்வை
1,16,569/ 85659/ 20543/ 1,06,202 / 10367
ஆண். பெண். மொத்தம் காலி

காவல்துறையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஐபிஎஸ் என்ற உயர் அதிகாரிகள்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் போலீஸ் சர்வீஸ் என்னும் TPS அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கான்ஸ்டபில் முதல் உதவி காவல் ஆய்வாளர் வரை தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தத் தேர்வு மூலம் உடல் தகுதி மதிப்பெண் எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் காவல் நிலையங்கள் மற்றும் பட்டாலியன் ஆயுதப்படை காவலர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்து பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழக காவல்துறையில் தற்போது 14 டிஜிபி கள் 17 ஏடிஜிபிகள் பணியில் உள்ளனர்.
உயரதிகாரிகள் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.
ஆனால் கான்ஸ்டபில் முதல் காவல் உதவி ஆய்வாளர் காலி பணி இடங்களின் பற்றாக்குறை ஆண்டுதோறும் இருந்துகொண்டே இருக்கின்றன.
சில மாதங்கள் முன்பு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்ற சைலேந்திரபாபு அவர்கள் காவலர்கள் மன அழுத்தத்தைப் போக்க வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க உத்தரவிட்டிருந்தார் ஆனால் தற்போது காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறையால் வார விடுமுறை அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

ஆகையால் காவல் துறையில் உள்ளவர்கள் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆவண செய்ய நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு முன்வரவேண்டும் என்பதே அனைத்து காவலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button