தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??
பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்கு
கிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் வரவேற்பு!ரவுடிகளை அடக்க நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை டிஜிபி ……!??
தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??
பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்கு
கிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி சக ரவுடிகள் வரவேற்பு!
இரும்புக்கரம் கொண்டு ரவுடிகளை அடக்க நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை டிஜிபி ……!??
கடந்தவருடம் 2021மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் அறிவித்த நிலையில்
தமிழக முதல்வரும் தேர்தல் கட்டுப்பாடு அமலில் இருந்தபோது தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த போது முசிறி அதிமுக கட்சியின் வேட்பாளர் செல்வராஜ் மகன் ராமமூர்த்தி காரில் சோதனையிட்ட போது பலகோடி ரூபாய் பணம் இருந்ததை தேர்தல் பறக்கும் படை பிடித்து விசாரணை செய்தபோது அந்த காரில் 10 கோடி வரை பணம் இருந்ததாக அதிமுக வேட்பாளர் கூற மீதி பணம் எங்கே என்று கேட்டபோது அப்போதுதான் திருச்சி அருகே பெட்டவாய்தலை என்ற இடத்தில் ஒரு காரில் இரண்டு கோடி ரூபாய் இருந்ததை தேர்தல் அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்ததில் அந்தப் பணம் அதிமுக வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவுக்காக வைத்திருந்த பணம் என்றும் அந்தப் பணத்தை திருச்சி ரவுடி சாமி ரவி என்பவர் கொலை மிரட்டல் விடுத்து காரில் கடத்தி கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது . அப்போது அதற்குத் தொடர்புடைய 8 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அதன்பின் ரவுடி சாமி ரவி தலைமறைவாக இருந்தார் அதன்பின் மே மாதம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பின் அனைத்து துறைகளிலும் ஆலோசனை செய்த முதல்வர் தமிழகத்தில் முக்கிய பொறுப்பான தலைமை செயலாளர் பொறுப்பை இறையன்பு அவர்களை நியமித்தார்.அதன்பின் தமிழ்நாடு காவல் துறை இயக்குனராக டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை நியமித்தார். அதன்பின் தமிழ்நாட்டில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வந்தது தமிழக அரசு. அதில் முக்கியமாக சட்ட ஒழுங்கு பற்றி தமிழக முதல்வருக்கு சைலேந்திரபாபு ஒரு அறிக்கை ஒன்றை கொடுத்தார் அதில் தமிழகம் முழுவதும் உள்ள குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளின் பட்டியலை கொடுத்தார் அதில் முக்கிய ரவுடிகளாக என்கவுண்டர் லிஸ்டில் 32 பேர் இருந்ததாகவும் கூறப்பட்டது அதன்பின் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேஷன் ஒன்றை நடத்தினார் அதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகளை ஒரு வாரத்திற்குள் கைது செய்து விசாரணை செய்து அதில் பல பேரை சிறையில் அடைத்தனர் மற்றவர்களை எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர் அந்த நிலையில் திருச்சி சாமி ரவி மீது பல கொலை கொள்ளை ஆட்கடத்தல் குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர் இது சம்பந்தமாக பல பத்திரிக்கைகளில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த போது அதில் சாமி ரவியை கைது செய்யாமல் இருக்க திமுகவின் முக்கிய புள்ளிகள் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது அதன்பின் பெட்ட வாய் தலை என்ற இடத்தில் ஜூலை 9ஆம்தேதி 2021 இல் தனிப்படை காவல் ஆய்வாளர் மாத்தையா தலைமையில்
செல் போனில் பேசிக் கொண்டு இருந்த சாமி ரவியை பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் . பழம் வியாபாரியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விட்டு பணம் பறித்ததாக வந்த புகாரின் அடிபடையில் தான் குண்டாஸ் போட்ட தாகவும் தேர்தல் நேரத்தில் பணம் பிடித்த வழக்கை விசாரித்தால் பல அர்சியல் வாதிகள் சிக்குவார்கள் என்று நினைத்த காவல் துறை நினைத்து பழ வியாபாரி கொடுத்த வழக்கில் கைது செய்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது .தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ரவுடி சாமி ரவிக்கு தற்போது ஜாமீன் கிடைத்து வெளியே வருகிறார் என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரவிய நிலையில் ரவுடிகள் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.அதன் பின் 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் புதுக்கோட்டை சிறைச்சாலையின் முன்பு கூடி நின்றதாகவும் இந்த தகவல் காவல்துறைக்கு தெரியவர காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர் .அதன்பின்பு சாமி ரவியை சிறையில் இருந்து மாற்று வழியில் வெளியில் கொண்டு சென்றனர் காவல்துறையினர்.
அதன்பின் 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்று கூடி ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு வைத்து ரவுடி சாமி ரவிக்கு மாலை அணிவித்து தலையில் கிரீடம் வைத்து பட்டாக் கத்திகள் வைத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் சட்டவிரோதமாக இப்படி ரவுடிகள் கூடி கேக் வெட்டி கொண்டாடியதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வருவதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது .200 ரவுடிகள் ஓரிடத்தில் கூடும் வரை காவல் துறையினர் என்ன செய்தனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது . தமிழகத்தில் உள்ள உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் போனது.தற்போது டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடி பட்டா கத்திகளுடன் கேக் வெட்டியது தமிழகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது .இது சம்பந்தமாக தமிழக முதல்வர் உடனடியாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அழைத்து ஆலோசனை செய்து உடனே இந்த ரவுடி கும்பல்களை விசாரணை செய்து மறுபடியும் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்
ரவுடி சாமி ரவி யார்!? அவர் பின்னணி என்ன??
குணசேகரன் என்ற சாமி ரவி திருச்சியில் பிறந்தவர் BE பட்டதாரி . சாமி ரவிக்கு ஆங்கிலம் இந்தி என பல மொழிகள் சரளமாக பேசுவார் .படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் சுற்றித் திரிந்த போது தான் ரவுடி முட்டை ரவியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு வலதுகரமாக இருந்து வந்துள்ளார்.முட்டை ரவியின் ஆட்கடத்தல் கொலை கொள்ளை அனைத்துக்கும் ஆங்கிலப் படத்தில் வரும் காட்சிகள் போல் ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பது தான் சாமி ரவிக்கு வேலை . 2000ஆம்ஆண்டு சிதம்பரத்தில் நடந்த கொலை வழக்கில் சாமி ரவிக்கு தொடர்பு இருந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை.2006ஆம் ஆண்டு திருச்சி மண்டல காவல்துறை ஐஜி ஜாபர் சேட் தலைமையில் தலைமறைவாக இருந்த முட்டை ரவியை பிடிப்பதற்கு சென்றபோது முட்டை ரவி என்கவுண்டர் செய்யப்பட்டார். அதன்பின் சாமி ரவி தனிக்காட்டு ராஜா போல் தன்னுடைய ரவுடி தொழிலை செய்து வந்துள்ளார்.
2007 ஆம்ஆண்டு ரியல் எஸ்டேட்அதிபர் துரைராஜ் அவரது டிரைவர் சக்திவேல் இரண்டு பேரையும் வையாம்பட்டி அருகே எரித்துக் கொலை இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் சாமி ரவி க்குதொடர்புடையதாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்…29/03/2012 ஆம்ஆண்டு தற்போது அமைச்சராக இருக்கும் கேஎன் நேருவின் சகோதரர் ராமஜெயம் அவர்கள் திருச்சி கல்லணை அருகே திருவனைச்சோலை இடத்தில் காலை ஐந்து மணிக்கு கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார் . அந்தக் கொலையில் காவல்துறை 9 வருடமாக விசாரணை நடத்தியும் இன்னும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை . 2006 ஜாபர்சேட் முட்டை ரவியை என்கவுண்டர் செய்தது கேஎன் ராமஜெயத்தின் தூண்டுதலால்தான் நடந்திருக்கும் என்ற ஒரு சந்தேகம் சாமி ரவிக்கு இருந்துள்ளது.குணா மற்றும் சாமி ரவியும் கே என் ராமஜெயம் வழக்கில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால் சாமி ரவி தமிழ் நாட்டை விட்டு வெளி நாட்டுக்குச் சென்று தலைமறைவாக இருந்து வந்தார். அப்போது செங்கல்பட்டு குரங்கு குமாருக்கு கூட்டாளியாக இருந்து கொண்டு பெரிய பெரிய தொழிலதிபர்களை கடத்தி அவர்களிடம் பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்பதை ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க தொடங்கினார் சாமி ரவி. அப்போது தான் சசிகலாவின் சகோதரி இளவரசியின் மகன் விவேக்கின் நட்பு கிடைத்தது அவருக்கு நம்பிக்கையானவராக இருக்க ஆரம்பித்தார். அப்போது சாமிரவி மீதுஉள்ள எந்த வழக்குகளையும் காவல்துறை விசாரிக்கவில்லையாம்.2016ம் அதிமுக ஆட்சி மீண்டும் வந்தவுடன் ஜெயலலிதா 2017 இறந்தவுடன் சசிகலா அவர்கள் பெங்களூர் சிறைக்கு சென்றவுடன் எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அதிமுக கட்சியில் ஓபிஎஸ் எடப்பாடி மீண்டும் இணைந்தனர் இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட சாமி ரவி ஓபிஎஸ் குடும்பத்திற்கு நம்பிக்கையானவர் ஆக இருந்து வந்தார் சாமி ரவி. அவ்வப்போது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகள் ஒன்று சேர்ந்து ஆலோசனை செய்யும் இடமாக சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலை தேர்ந்தெடுத்தார் சாமிரவி.அங்குதான் அனைத்து கட்சிகளும் போட ஆலோசனை நடத்துவார்களாம்.என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. தற்போது பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல 2021 ஆட்சி மாற்றம் வந்தவுடன் தமிழ்நாட்டில் ஆட்கடத்தல் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற 30க்கும் மேற்பட்ட குற்றங்களில் சாமி ரவி தொடர்புடைய வழக்குகளை தமிழ்நாடு புதுச்சேரியில் காவல் நிலையங்களில் தூசி தட்டி எடுக்க ஆரம்பித்தனர்காவல்துறையினர். அதைத்தொடர்ந்து தான் சில மாதங்களுக்கு முன்பு சாமி ரவி புதுக்கோட்டை அருகே பழம் விற்கும் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணத்தை வழிப்பறி செய்ததாக சாமி ரவி மீது வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.