பயிற்சிக்கு செல்ல இருக்கும் 620 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியில்!
1993இல் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணி செய்யும் நிலையில் தற்போது 620 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளராக பணி நியமனம் செய்ய உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும்
15 /9 /2021 தேதி முதல் காவல்துறை பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 93 பேச்சில் பணி செய்தவர்கள் உதவி ஆய்வாளராக பணியில் இருப்பதாகவும் .தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர்கள் உதவிஆய்வாளர்களாக பணி உயர்வு நியமனம் செய்யும் முன்பு பயிற்சிக்கு அனுப்புவதால் பணி மூப்பு அடிப்படையில் இவர்கள் பின்தங்கி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .ஆகையால் பயிற்சிக்கு செல்லும் அனைவரையும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆக பணியில் சேர்ந்த அன்று முதல் உதவி ஆய்வாளர்களுக்கான பணிமூப்பு அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
எப்போதுமே சென்னையில் பணிபுரியும் காவலர்களுக்கு சென்னை பயிற்சி மைதான வகுப்பில் தான் பயிற்சி அளிக்கப்படும் .
ஆனால் தற்போது சென்னையை விட்டு பிற மாவட்டங்களில் உள்ள திருவள்ளூர் ,வேலூர் ,விழுப்புரம் ,திருச்சி ,மதுரை,காவல் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் பயிற்சிக்கு செல்லும் காவலர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஏனென்றால் பயிற்சிக்கு செல்லும் காவலர்கள் அனைவரும் 50 வயதை நெருங்கியவர்கள். இவர்களுக்கு உடல் ரீதியாக சில நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்கள் தங்கள் பணி செய்த சென்னை சார்ந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி எடுத்தால் மட்டுமே மனதளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றனர். ஆகையால் பெரும்பாலான காவலர்கள் சென்னையில் உள்ள உதவி ஆய்வாளர் பயிற்சி பள்ளியில் பயிற்சிஅளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் ஏற்று பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதை மறுபரிசீலனை மறு பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் சென்னை காவலர்கள்.