மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடை நிறுவனத்தின் மீது ஆட்சியரிடம் புகார்!
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்குமா!??
மதுரையில் பல அடுக்கு மாடி கொண்ட பிரபல ஜவுளி கடை நிறுவனத்தின் மீது புகார்!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள்!??
மதுரையில், திருமங்கலம் செல்லும் பிரதான சாலையில், பழங்காநத்தம் அருகே சரவணா ஸ்டோர் என்ற பெயரில் பிரமாண்டமான பல அடுக்கு மாடிகள் கட்டிடம் சிலவருடங்கள் முன்பு கட்டி முடித்து திறக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தில் அனைத்து மாடிக்களுக்கும் செல்ல தானியங்கி படிகள் அமைக்கப் பட்டுள்ளது.
மதுரை மற்றும் மதுரை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து பண்டிகை காலங்களில் தினமும் 1000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் குடும்பத்துடன்
அந்த ஜவுளிக்கடைக்கு வருவது வழக்கம்.
ஆனால் பண்டிகை காலங்களில் எந்த பாதுகாப்பு இல்லாமல் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் தானியங்கி படிக்கட்டுகளில் செல்கின்றனர். அப்படி கூட்ட நெரிசலில் செல்லும் போது விபத்துகள் நடக்கின்றன.
என்றும் விதிகள்மீறிகட்டப்பட்டுள்ளதாகவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும்
(மதுரை சரவணா ஸ்டோர்ஸ்க்கு சீல் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது!
Aug 24,
(மதுரையில் விதிமுறைகளை மீறி சரவணா ஸ்டோர்ஸ் கட்டப்பட்டுள்ள நிலையில், 7 நாட்களுக்குள் கட்டிடத்தை மாற்றி அமைக்காவிட்டால் சீல் வைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது..)
இது போல் தான்
மதுரை மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்,கூலித் தொழிலாளியான இவருடைய ஏழு வயது மகன் நித்தீஷ் தீனா,இவர்கள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் எடுக்க,
குடும்பத்துடன் ஜவுளி எடுக்க தானியங்கி ( எக்ஸ்லேட்டர் ) படியில் இறங்கும் போது குழைந்தை தவறி விழுந்ததில் காலில்முறிவு ஏற்பட்டது.உடனே அருகில் உள்ள தனியார்மருத்துவ மனையில் பாதிக்கப்பட்ட குழந்தையை ஜவுளி கடை நிறுவனம் அனுமதித்துள்ளனர்.
உடனே இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மதுரை சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், விசாரணை ஜவுளி நிறுவனத்திற்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக நடப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சையை முழுமையாக நிறைவடையும் முன்பாகவே ஜவுளி கடை நிறுவனம் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் சொல்லி அவசர அவசரமாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து விட்டதாக கூறப்பட்டது.
இது சமாந்தமாக தனியார் மருத்துவ மனை நிர்வாகம் குழந்தைக்கு சிகிச்சை பார்ப்பதற்கு போதுமான பணம் ஜவுளி கடை நிறுவனம் கட்ட வில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது ,
கூலித்தொழிலாளி என்று அலட்சியமாக கவனக்குறைவாக செயல்பட்ட பிரபல தனியார் ஜவுளிக்கடை நிர்வாகத்தின் மூலம் உரிய நிவாரணம் பெற்று கொடுக்க வேண்டும், மேலும் குழந்தைக்கு தரமான உயர் சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்ற வேண்டும் எனக்கூறி குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்
ஜவுளி கடை நிறுவனம் கடையில் தானியங்கி படிக்கட்டுகளில் பயன்படுத்தும் வேலைஆட்கள் மற்றும் பொதுமக்களுக்கு சரியான முறையில் விபத்து காப்பீடு செய்யாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது என்ற தகவல் வந்துள்ளது.
காப்பீடு செய்யாத காரணத்தினால் தான் தனியார் மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு முறையான சிகிச்சை அளிக்காமல்
பண உதவியும் செய்யாமல் கைவிட்டதாக பாதிக்கப் பட்ட குழந்தையின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ சட்ட விரோத மாக செயல்படும் பல அடுக்கு மாடி கட்டிட நிறுவனங்கள் மீது மதுரை மாநகராட்சி நிர்வாகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தடுக்க முடியும் .
என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.