மாவட்டச் செயலாளர் பதவிக்கு நடக்கும் அகினிப் பரிச்சை!?

சென்னைக்கு அருகேயிருக்கும் மாவட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கும், ‘மூன்றெழுத்து’ எம்.எல்.ஏ ஒருவருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளதாக தகவல்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அப்போது வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் இருந்ததாக தகவல்!
இரண்டு பேருக்கும் இருந்த இந்த பிரச்சனை திமுக ஆட்சி மேலிடத்தின் குடும்பத்தினரிடம் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, எப்படியாவது அமைச்சர் பதவியைப் பிடித்துவிடலாம் என்று எண்ணியிருந்தார் எம்.எல்.ஏ. ஆனால் அவருடைய அமைச்சர் பதவியின் கனவு எண்ணம் நிறைவேறவில்லை.
இதனால், அமைச்சர் பதவியைப் பிடிக்க, தற்போதைய அமைச்சர் மற்றும் அவரின் வாரிசு பற்றி மேலிடத்துக்குப் புகார் மீது புகாராக தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறாராம் எம்.எல்.ஏ.
அமைச்சர் தரப்பும் எம்.எல்.ஏ தரப்பு மாவட்டச் செயலாளர் பதவிக்குக் குறிவைத்து செய்துவரும் உள்ளடி வேலைகளைப் பற்றி ஆட்சி மேலிடத்துக்கு புகாராகச் சொல்லியிருக்கிறாராம். இருவரின் சண்டை, சச்சரவு தாங்க முடியாமல், காதைப் பொத்திக்கொள்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
.