ரோஜா மலர்களைக் கொடுத்து தன்னம்பிக்கை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்(23.09.2021) செப்டம்பர் மாதம் 22ம் தேதி உலகரோஜா தினம் புற்று நோயாளிகளுக்கென அனுசரிக்கப்படுகிறது.
புற்று நோயால்ப்பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரோஜா மலர்களைக் கொடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அவர்களை உற்சாகபடுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும் போது
உலகரோஜா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 22ம் தேதி புற்று நோயாளிகளுக்கென அனுசரிக்கப்படுகிறது.
இந்தநாளில் அவர்களுக்கு ரோஜாக்களை பரிசளித்து அவர்கள் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒருநிகழ்வாகும்.
இதன் மூலம் அவர்களின் துயரத்தை மனதளவில் குறைக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
கனடா நாட்டைச்சார்ந்த 12 வயது மெலிண்டாரோஸ் என்ற சிறுமி ஆஸ்கின் புற்றுநோய் என்ற அரியவகை இரத்தப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு,மருத்துவர்கள் அவர் இன்னும் 6 வாரங்களே உயிர்பிழைப்பார் என்றுத்தெரிவித்த நிலையில் அச்சிறுமி தன்னுடையத் தன்னம்பிக்கையினால் 6 மாதங்கள் வரை உயிர்வாழ்ந்தார்.
மேலும் அந்த காலகட்டத்தில் அச்சிறுமி புற்றுநோயினால்ப் பாதிக்கப் பட்ட மக்களிடையே உரையாடுவது, அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, அவர்களுக்கென்று பாடல் பாடுவது என்று அவர்களை பலவகையில் உற்சாகப் படுத்தி அவர்கள் மனதில் உள்ள மனஅழுத்தத்தை க்குறைக்க வழி செய்தார்.
அச்சிறுமியின் நினைவாகப் புற்றுநோயினால்ப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொருவருடமும் செப்டம்பர்மாதம் 22ம் தேதி உலகரோஜா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் ரோஜா மலர் அன்பை வெளிப்படுத்தும் மலராக கருதப்படுவதால் இத்தினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா மலர்களைக் கொடுத்து அன்பையும் அரவணைப்பையும் நம்மில் ஒருவராக கருதும் வகையில் தன்னம்பிக்கை ஊட்டப்படுகிறது.
மேலும், புற்று நோயின் தாக்கங்கள் புற்றுநோய் வராமல் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நோயின் பெருந்தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்.ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.
நரிக்குடி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) மரு.சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யவதி, திருநாவுக்கரசு, வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன்,வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரெங்கசாமி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.