விருந்துக்கு சென்ற காவலர் விப்பத்தில் பலி
தர்மபுரி அருகே ஆடிப்பெருக்குக்கு மாமியார் வீட்டிற்குச் சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலி !
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அவருடன் பணி செய்த ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் நிதி திரட்டி உதவி செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சேர்ந்தவர் காமராஜ் இவரது மகன் புகழேந்தி வயது 28 இவர் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓசூர் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த நாகராஜ் மகள் கௌதமி 23 என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கௌதமி தன் தாய் வீட்டில் இருந்து வந்தார் ஆடி18 பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த புகழேந்தி மாமியார் வீட்டிற்கு விருந்திற்காக டூவீலரில் புறப்பட்டுச் சென்றார் மகேந்திரமங்கலம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து காவலர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதால் படுகாயமடைந்த காவலர் வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இது சம்பந்தமாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருமணமாகி ஒரு மாதத்தில் மாமியார் வீட்டுக்கு விருந்துக்குச்சென்றவர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.