மணல் மாஃபியா கும்பலிடம் சிக்கி
பாலைவனமாக காட்சியளிக்கும் தேனி மாவட்டம்!அவலம்!
மாதம் பல லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் !

தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர்! திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராகப் பணியாற்றிய மாரியம்மாள் மீது, குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் வசூலித்து, வங்கி கணக்கு மூலம் பணப் பரிமாற்றம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான மடியில் அமைந்துள்ள ஒரு இயற்கையின் சொர்க்கமாகும். இது மேகமலை, கும்பக்கரை மற்றும் சுருளி அருவிகள், தேயிலை தோட்டங்கள், மற்றும் வைகை அணை போன்ற ரம்மியமான சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கு, திராட்சை மற்றும் தென்னை சாகுபடிக்கு பெயர் பெற்ற பசுமையான
சிறப்புமிக்க பகுதிகளும் கண்களுக்கு
விருந்தளிக்கும் இயற்கை சூழ்ந்த
தேனி மாவட்டம்

தற்போது மணல் மாஃபியா கும்பல் வசம் சிக்கி வறண்ட பாலைவனமாக காட்சியளிப்பதாக காட்சியளிக்கும் அவல நிலை!
தேனி மாவட்டத்தில் குறிப்பாக பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் உள்ள
பெரியகுளம்,போடிநாயக்கனூர், கொட்டக்குடி ஆறு, சின்னமனூர் கோடாங்கிபட்டி, தோப்புபட்டி, எம்.சுப்புலாபுரம் ,திருமலாபுரம், தேக்கம்பட்டி, ஆண்டிபட்டி, தாலுகாவில் மரிகுண்டு, சிலமலை, கரட்டுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, பொட்டிபுரம், குள்ளபுரம், வைகை அணை ஆகிய பகுதிகளில் உள்ள 39 மண் மற்றும் கல் குவாரிகளில்

சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து அருகில் உள்ள கேரளாவிற்கு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பான வகையில் தினந்தோறும் கம்பம் மெட்டு வழியாக

100-ற்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகளில் கடத்திக் கொண்டு விற்கப்பட்டு வருவதாகவும் இந்த கனிமவள கொள்ளை சம்பவங்களில் சில மணல் மாபியா கும்பல் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ஆண்டிபட்டி தாலுகா மறப்பம்பட்டி,தெப்பம்பட்டி ,கணேசபுரம், ஆகிய பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல்

நீர்நிலை நீர்நிலைகளில் சட்டவிரோதமாக ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களை கொண்டு இரவு பகலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகளில் தினம்தோறும் கடத்தி விற்பனை செய்து வருவதாகவும்
தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை சூழ்ந்த மலை அடிவாரங்களில் இராட்சத இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் கடத்தப்படுவது தேனி மாவட்ட ஆட்சியருக்கும் , கனிமவள உதவி இயக்குனருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் போவது எப்படி!? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் .
எது எப்படியோ கனிம வளங்களை வெட்டி இயற்கை வளங்களை சூறையாடி வருவதால் பசுமை மாறா இயற்கை சூழ்ந்த பகுதி என அழைக்கப்படும் தேனி மாவட்டம் வறண்ட பாலைவனமாக மாறி வருவதை கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாரியம்மா வேடிக்கை பார்த்து வருவதுதான் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட கொள்ளைக்கு வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறைகளில் பணி புரியும் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை தகுதிக்கேற்ப லஞ்சமாக கொள்ளைப் பணத்தை வாரிக் குவிக்கின்றனர்.அதனால் தான் கனிம வளம் தொடர்பான பணி இடங்களில் அமர்வதற்கு, அதற்கான அதிகாரிகள், ஊழியர்கள், திரளான நிதியை லஞ்சமாகக் கொடுத்து அப்பணியிடத்தைப் பெற்றுச் செல்கிறார்கள்.
தாது வளங்களின் பயன்கள், அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இந்த வளங்களை சட்ட விரோதமான முறையில் வெட்டி எடுப்பதும், விநியோகிப்பதும் குற்றச் செயல். இத்தகைய கனிம வளக் கடத்தல்களை கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கனிம வளங்களைப் பாதுகாக்கவும், அவற்றை முறையான அளவில் வெட்டி எடுப்பதன் மூலம் அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கவும் வழி செய்திட 2011-இல் சட்டம் இயற்றப்பட்டது.கனிமங்கள் கண்காணிப்பு: கனிமங்களை எடுக்க உரிமம் அளிக்கப்பட்ட குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களின் அளவு ஆளில்லாத விமானங்கள் மூலமாக கண்காணிக்கப்பட வேண்டும்.எல்லையோர மாவட்டங்கள் மட்டுமின்றி, இதர மாவட்டங்களிலும் விதிகளை மீறி கனிமங்களை எடுக்கும் வாகன உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், வாகன ஓட்டுநா்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணல் மாஃபியா கும்பலிடம் சிக்கி பாலைவனமாக மாறிவரும் தேனி மாவட்டத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!



