காவல் செய்திகள்

நீதிமன்றம் வளாகத்தில்   காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி  கைது  செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்!


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூச்சிவாக்கம் பேக்கரியில் .
சிமெண்ட் முருகன்’ என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம் குறித்து முருகன், காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் சிமெண்ட் முருகன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் (SC/ST Act) கீழ் நடவடிக்கை எடுக்க கோரியும், புகார் அளிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் காவல் துறை தரப்பிலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் முருகன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. புகாரின் தீவிர தன்மை குறித்தும், ஒரு மாத காலமாகியும் காவல் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் நீதிமன்றம் ஆழ்ந்த கவலை தெரிவித்தது. விசாரணையின் போது, புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய


காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு துணை காவல் கண்காணிப்பாளர்  சங்கர் கணேஷ் அவர்களுக்கு உள்ளது .
இந்த புகார் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறி, நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேசை உடனடியாக  கைது செய்து, வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு, நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.
சீருடைகள் இருந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சக காவலர்களின் உதவி உடன் மாயமானார் என்று தகவல் வெளியான நிலையில் 30 நிமிடங்களுக்கு பின் அவர் மீண்டும் கிளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காஞ்சிபுரம் டிஎஸ்பி தப்பி ஓடவில்லை, கழிவறைக்கு சென்றார் என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்

எது எப்படியோ
சீருடையில் இருந்த டிஎஸ்பி சங்கர் கணேஷை போலீசார் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக குற்றவாளிகள் மீது மட்டுமே இப்படிப்பட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுண்டு. ஆனால், சட்டத்தை காக்க வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு டிஎஸ்பி மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, காவல்துறை துறையின் மீது பெரும் கேள்விக்குறி எழுப்புகிறது.
மாவட்டம் முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. சமூகநீதி அமைப்புகள், “இது தாமதமாக வந்தாலும் நீதி கிடைத்ததற்கான சான்று. எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம்” எனக் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷுக்கு ஆதரவாக சில காவல்துறை வட்டாரங்கள் குரல் கொடுத்து வருகின்றன. “சில நிர்வாக காரணங்களால் வழக்கு உடனடியாக முன்னேறவில்லை. அதை தவறாக சித்தரித்து அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என வாதிடுகின்றனர்.

எதுவாயினும், இந்த சம்பவம் தமிழகத்தில் காவல்துறை பொறுப்புகள், நீதித்துறை நடவடிக்கைகள் குறித்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வரும் 22-ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையில், டிஎஸ்பி சங்கர் கணேஷின் நிலைமை என்ன ஆகும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட சம்பவம், சட்டத்தின் முன் எவரும் விலக்கல்லை என்ற உண்மையை மீண்டும் வலியுறுத்துகிறது.

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.

Related Articles

Back to top button