காவல் செய்திகள்

ஆபாச படங்களை காண்பித்து அதேபோல் செய்து காட்ட சொல்லி பாலியல் தொல்லை! ஞான வித்யமந்திர் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் தந்தை கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!





கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்

தனேஷ் குமார் (43), என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என் மகன் அஸ்விந்த் பிரகாஷ் சிங் (14)

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம் புதூர் அருகே கீழக்காட்டுவிளை  ஞான வித்யாமந்தீர் (சிபிஎஸ்இ ) பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறான் .கடந்த 02.08. 2025, தன்னுடைய மகன் அஸ்வின் தன்னுடைய மொபைல் போனை எடுத்து விளையாடி விட்டு தவறுதலாக அவனுடைய ஸ்கூல் பேக்கில் போட்டு விட்டு பள்ளிக்கு எடுத்து சென்று விட்டான். அதனை உடன் படிக்கும் நண்பர்கள் எடுத்து  விளையாடியுள்ளனர். இதை கேள்விப்பட்டு அந்தப் பள்ளி  நிர்வாக அதிகாரி மணிகண்டன் (35), என்பவர் மொபைல் போனை வாங்கிவிட்டு எனது மகனை அவரது அலுவலகத்திற்கு வர வைத்துள்ளார். மொபைலில் கூகுளில் சென்று அவன் என்னென்ன பார்த்துள்ளான் என தேடி பார்த்து விட்டு என் மகனிடம் என்னென்ன பார்த்தீர்கள் என்று கேட்டுள்ளார் .

அதற்கு நான் எதுவும் பார்க்கவில்லை  நண்பர்கள் தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று பதில் கூறியதற்கு மேற்படி மணிகண்டன் மொபைலில் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள் அதனால் நான் உன்னை பள்ளியை விட்டு நீக்க போகிறேன் என்று கூறி எனது மகனை மிரட்டி உள்ளார். எனது மகன் பள்ளியை விட்டு நீக்க போகிறேன் என்று கூறியதும் கதறி அழுதுள்ளார் .

சித்தரிக்கப்பட்ட கோப்பு படம்

அதற்கு மணிகண்டன் நீ அழ வேண்டாம் அந்த மொபைலில் நீ பார்த்ததை இப்போது என்னிடம் செய்து காட்டு என்று கூறி எனது மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்று உள்ளார். அதற்கு மறுத்து எனது மகன் நீங்கள் என்னை தொட்டு வற்புறுத்தினால் நான் சத்தம் போடுவேன் என்று கூறவே மணிகண்டன் உடனடியாக அவரது இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார். (இதே போன்று ஏற்கனவே ஒரு பத்தாம் வகுப்பு பயின்ற எஸ்.சி மாணவனை இதே போன்று பள்ளியில் இருந்து நீக்கி உள்ளார்)  நான் உன்னிடம் கூறியதை வெளியில் சொன்னால் உனக்கு உடனடியாக பள்ளி மாற்று சான்றிதழ் தந்து விடுவேன் என்று கூறி தனது மகனை மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். சம்பவம் குறித்து மறுநாள் நான் பள்ளிக்கு நேரில் சென்று மணிகண்டனிடம் எப்படி எனது மகனிடம் நீ ஆபாசமாக நடந்து கொள்வாய் என்று கேள்வி கேட்டதற்கு எனது ஜாதியின் பெயரைக் கூறி நீ எல்லாம் என்னை எதிர்த்துப் பேசுகிற அளவிற்கு வந்து விட்டாயா ? வெளியே போ என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பி விட்டு
கடந்த 14.08 . 2025 அன்று எனது மனைவியின் மொபைலில் தொடர்பு கொண்ட பள்ளியில் தாளாளர் ராஜ ரம்யா உங்களுக்கெல்லாம் இங்கு படிக்க தகுதி இல்லை நீங்கள் எல்லாம் வேறு ஸ்கூல் பார்த்து படித்துக் கொள்ளுங்கள்  எங்கள் பள்ளியை மூடினாலும் எங்களுக்கு கவலை இல்லை உங்களை இங்கே படிக்க விடமாட்டோம் என்று மிரட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 07.05. 2025 அன்று  பள்ளிக்கு சென்ற எனது மகன் கையில்  மேற்படி பள்ளியின் நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் தாளாளர் ராஜரம்யா , மற்றும் பள்ளி முதல்வர் சந்திர கலா ஆகியோர் சட்டத்திற்கு புறும்பாக நான் மாற்று சான்றிதழ் விண்ணப்பிக்காமலேயே அவர்களாகவே மாற்று சான்றிதழை வலுக்கட்டாயமாக எனது மகனிடம் கொடுத்து. அவனை அடித்து  துன்புறுத்தி எழுதி வாங்கி விட்டு வீட்டிற்க்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்படி எதிரிகளின் செயலால் எனக்கும் எனது குடும்பத்திற்க்கும் மிகுந்த மரண பயமும், மன வேதனையும் ஜாதியின் பெயரை கூறி இழிவு படுத்தியதால் மன வேதனையும் அடைந்து உள்ளேன். எனவே பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button