அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படும்
தனியார் மதுபான கூடம் !
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் வாடிப்பட்டி காவல்துறை..! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்..!?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையின் விற்பனையாளர் அரசு அனுமதி இல்லாமல்
ஒரு கட்டிடத்தைக் கட்டி அதில் சட்டவிரோதமாக மதுபானக்கூடம் நடத்தி வருகிறார்.
சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாமல் வாடிப்பட்டி காவல்துறையினர் கல்லா கட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர்.
ஆகவே சட்ட விரோதமாக செயல்படும் மதுபான கூடத்தை உடனடியாக மூடா நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அந்த மதுபான கூடத்தை நடத்திய நபர் மீது சட்டரீதியாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் மதுரை மாவட்ட சேர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயல்பாட்டை..


