மாவட்டச் செய்திகள்

வாடிப்பட்டியில் துரத்தி துரத்தி கடித்து அச்சுறுத்தி வரும் விஷப் பூச்சிகள்!வலியால் துடிக்கும் குழந்தைகள்    அதிர்ச்சி வீடியோ!
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மண்டலம் மேலாளர்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி  கிட்டங்கியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் முறையாக பராமரிக்கப்படாததால் விஷப் பூச்சிகள் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் கண்களில் கடித்ததால்   வலியால் துடிக்கும் அதிர்ச்சி வீடியோ!

வாடிப்பட்டி பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து அச்சுறுத்து வரும் விஷப் பூச்சிகள்! கண்டுகொள்ளாமல் போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள்!


நடவடிக்கை எடுப்பாரா மதுரை மண்டலம் மேலாளர்!


பொது விநியோகத்திட்டத்திற்கு தேவையான இன்றியமையாப் பொருட்களை கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் உன்னத பணிகளை மேற்கொண்டிட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வது, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர முகமைகள் மூலம் தாலுகா செயல்பாட்டு குடோன்களில் இருந்து பல்வேறு பொது விநியோக அமைப்புகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு சேமித்து வைப்பது. மாநகராட்சி நெல் கொள்முதல், உமிழ்வு மற்றும் பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையின் கீழ் அரிசியைப் பயன்படுத்துகிறது.
ஒவ்வொரு வட்ட அளவிலும் (Taluk) செயல்படும் கிட்டங்கிகள், ‘கிடங்கி கண்காணிப்பாளர்’ (Godown Superintendent) மற்றும் மண்டல மேலாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

உணவுப் தானியங்களைப் பாதுகாக்கும் வகையில் அறிவியல் பூர்வமாகவும், அதிநவீன முறைகளிலும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக
அறிவியல் பூர்வமான பராமரிப்பு பூச்சி மற்றும் எலி கட்டுப்பாடு: சேமிக்கப்படும் உணவு தானியங்கள் (அரிசி, கோதுமை, பருப்பு வகைகள்) பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளால் சேதமடையாமல் இருக்க, நவீன அறிவியல் முறையிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் குறிப்பிட்ட இடைவெளியில் தெளிக்கப்பட வேண்டும்.
ஆனால் இதில் குறிப்பிட்டுள்ளது போல் எதுவுமே எந்தக் கிட்டங்கிகளும் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக கழக கிட்டங்கியில் சேமித்து வைத்துள்ள தானியங்களுக்கு முறையாக பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் இருப்பதால் அந்த குடோன் முழுவதும் விஷ பூச்சிகள் சூழ்ந்து காணப்படுகிறது அதுமட்டுமல்லாமல் மாலை நேரங்களில் அந்த பூச்சிகள் குடோன் அருகில் உள்ள குடியிருக்கும் பகுதிகளில் பறந்து சென்று அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஷ பூச்சிகள் கடித்து வருவதாகவும் குறிப்பாக கண்களில் கடித்து கண்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவோ பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாடிப்பட்டி  கிட்டங்கியில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் முறையாக பராமரிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும்  குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நலன் கருதி திட்டங்கில் உள்ள விஷப் பூச்சிகளை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க உடனடியாக
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மண்டலம் மேலாளர்!

Related Articles

Back to top button